போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை கண்டறிவது எப்படி..?

Written By:

பேஸ்புக் ஆக இருந்தாலும் சரி, வாட்ஸ்ஆப் ஆக இருந்தாலும் சரி எந்தவொரு பிளாட்பார்மிலும் ஒரு போலியான அக்கவுண்ட்டை உருவாக்குதல் என்பது மிகவும் எளிதான காரியமாகும். இம்மாதிரியான இடத்தில தான் சமூக ஊடக மற்றும் சுய தனியுரிமை போன்ற விடயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

உருவாக்கம் பெறுவது எளிமையாக இருப்பினும் அது சில நேரங்களில் போலி மற்றும் ஒரு உண்மையான அக்கவுண்ட் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான வேறுபாட்டை கண்டறிவது சற்று கடின,மான காரியம் தான். அப்படியாக இங்கே எளிதாக ஒரு போலியான வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை கண்டறியும் வழிமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்பூப் நம்பர் :

பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெறுகின்றன, உடன் அந்த எங்கள் அமெரிக்க எண்களாய் இருக்க அதிக வாய்ப்புள்ளது அபப்டியாக நீங்கள் திடீரென்று ஒரு வினோதமாக எண்ணில் இருந்து ஒரு செய்தியை பெற்றால் உஷாராகிக் கொளுங்கள் அது ஒரு போலி அக்கவுண்ட் ஆக இருக்க அதிக வாய்ப்புண்டு.

பிளஸ்1

யாரோனும் உங்களுக்கு +1 என்று தொடங்கும் ஒரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் பெற்றால் அது ஒரு விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) ஆப் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். +1 என தொடங்கும் எந்தவொரு எண்ணும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

பிளஸ்44 :

ஒருவேளை நீங்கள் திடீரென்று +44 எனத்தொடங்கும் ஒரு தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் பெற்றால் அதுவும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு. அவைகள் அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள் ஆகும்.

அறிகுறி :

உங்களுக்கு கிடைக்கப்பெறும்மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் புகைப்படத்தில் ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவர படம் இருந்தால் மற்றும் சில நிமிடங்களுக்கு முன்பே மாற்றப்பட்ட ஸ்டேட்டஸ் கொண்டிருந்தால் அதுவொரு போலியான அக்கவுண்ட் ஆக இருக்கலாம் என்ற அறிகுறியை காட்டுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
5 Warning Signs to Spot a Fake WhatsApp Account. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்