உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன் ஆன் ஆகவில்லையா? இதோ எளிய 5 வழிகள்

By Siva
|

உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன் ஆன் ஆகவில்லையா? இதோ எளிய 5 வழிகள்

உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன் ஆன் ஆகவில்லையா? இதோ எளிய 5 வழிகள்

மிக அவசரமான வேலைகளை முடிக்க நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து ஆன் செய்யும்போது, அந்த கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை என்றால் வரும் டென்ஷனுக்கு அளவே இல்லை. நல்ல நேரத்தில் கம்ப்யூட்டர் கடுப்படிக்கின்றதே என்ற ஆதங்கம் உங்கள் மனதில் எழும்

அமேசானில் கிடைக்கும் 10 மலிவு விலை புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

இந்த மாதிரியான சமயத்தில் பதட்டம் அடையாமல் எதனால் கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்ல்லை அல்லது மானிட்டர் ஆன் ஆகவில்லை என்பதை பொறுமையாக பார்த்தால் ஒரு நல்ல வழி கிடைக்கும், மேலும் கீழே சொல்லும் எங்கள் அறிவுரைகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்

பவர் சப்ளையை செக் செய்யுங்கள்:

ஒரு கம்ப்யூட்டரோ அல்லது மானிட்டரோ ஆன் ஆகவில்லை என்றால் முதலில் நீங்கள் செக் செய்ய வேண்டியது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பின் பவர் சப்ளையை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு பிராட்பேண்ட்டை தேர்ந்தெடுக்கும் முன்பும் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்..!

லேப்டாப்பை பொருத்தவரை அதன் ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துவது நல்லது. ஒரிஜினலை பயன்படுத்தாத நிலையில் பிரச்சனை வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஒரிஜினல் இல்லை என்றால் அதற்கென நீங்கள் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலவு செய்ய வேண்டியது அவசியஃம்

அடுத்தது டிஸ்ப்ளேதான்:

லேப்டாப்பை ஆன் செய்யும் முன் வேறு ஏதாவது புரஜொக்டர் அல்லது எக்ஸ்ட்ரா மானிட்டர் பொருத்தியுள்ளீர்களா? என்பதை கவனியுங்கள். அவ்வாறு பொருத்தியிருந்தால் முதலில் அதை நீக்குங்கள். மேலும் கம்ப்யூட்டர் செயல்படும் சத்தம் மட்டும் கேட்டு, ஸ்க்ரீனில் ஒன்றுமே தெரியவில்லை என்றால் பிரச்சனை ஸ்க்ரீனில்தான் என்று அர்த்தம். அதனை உடனே சரி செய்யவும்

இதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும்:

உங்கள் லேப்டாப் ஆன் ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் ஏதாவது docking stations உடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனியுங்கள். ஒருவேளை இணைக்கப்பட்டிருந்தால் உடனே அதை நீக்கிவிட்டு கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்யுங்கள். மேலும் கம்ப்யூட்டரை ஆன் செய்யும்போது பென் டிரைவ் போன்ற எக்ஸ்டர்னல் டிவைஸ்களை நீக்கிவிட்டு பின்னர் ஆன் செய்யுங்கள்

ஹார்ட்வேர் பிராப்ளம் ஆகவும் இருக்கலாம்:

மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்தீர்கள் என்றால் அடுத்ததாக உங்கள் கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் பிராப்ளம்தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இந்த மாதிரியான நேரத்தில் நீங்களே ஹார்ட்வேரில் கைவைக்க கூடாது. அருகில் உள்ள சர்வீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ரிப்பேர் செய்யுங்கள்

பேட்டரியும் ஒரு காரணமாக இருக்கலாம்:

சில சமயம் உங்கள் லாப்டேப்பை நீங்கள் சார்ஜில் வைத்துவிட்டு மறந்துவிடுவீர்கள். அது ஓவர் சார்ஜ் ஆகி ஸ்டார்ட்டிங் பிராப்ளத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்டில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

10 கோடி அழைப்பு தோல்விகள் : ஏர்டெல் மீது ஜியோ பாய்ச்சல்..!

ஸ்டெப் 1: சார்ஜரை நீக்கிவிட்டு பின்னர் பேட்டரியை வெளியே எடுங்கள்

ஸ்டெப் 2: பவர் பட்டனை தொடர்ந்து 15 வினாடிகளுக்கு அழுத்துங்கள்

ஸ்டெப் 3: இப்போது உங்கள் லேட்பாப்பில் பேட்டரியை போட்டுவிட்டு பின்னர் சார்ஜை இணைத்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 4: இப்பொழுது நீங்கள் பவர் பட்டனை அழுத்தினால் உங்கள் லேப்டாப் ஆன் ஆகிவிடும். உங்கள் பணியை நீங்கள் நிம்மதியாக தொடரலாம்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Troubleshooting a Windows or MacBook laptop doesn't boot up is indeed a sad scenario! In this case, start diagnosing your laptop and make a checklist of possible problems.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X