உங்களுக்கு தெரியுமா?உங்கள் ஸ்மார்ட் போனை இப்படியும் உபயோகிக்கலாம்.!

நமது ஸ்மார்ட்போன்களில் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தக் கூடிய வசதிகளும் உள்ளன.அவைகள் என்னவென பார்ப்போம்.

Written By:

இப்போதைய நாட்களில் நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களையே காண இயலாது.அந்த அளவினுக்கு நம் வாழ்வில் ஸ்மார்ட்போனின் தேவை தவிர்க்க இயலாததாகிவிட்டது.

அத்தைகைய ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு எல்லோருக்கும் பலவித காரணங்கள் இருக்கலாம்.ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனை இப்படியும் பயன்படுத்தலாம் எனக் கூறும் அளவினுக்கு வசதிகள் சில உள்ளன வாங்க அவை என்னவென பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

படிக்க இயலாதவற்றைக் கேட்கலாம்:

நீங்கள் எப்போதாவது நெடுந்தூர பயணத்தின் போதே,அல்லது முக்கியமான வேலைகளின் போதோ உங்கள் மொபைல் வழியே செய்திகள்,கட்டுரைகள் உள்ளிட்டவைகளை படிக்க இயலவில்லை என வருதுகிறீர்களா? அப்படி கவலை கொள்ளவே தேவை இல்லை.படிக்க இயலாததனை கேட்கலாம் இதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் அவுட்புட் ஆப்ஷனை ஆன் செய்தால் போதும்.இதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ்>அக்ஸ்சிபிலிட்டி என்ற வசதி வழியே சென்று ஆன் செய்து கொள்ளலாம்.இனி படிக்க இயலாதவற்றை கேட்கலாம்.

தொலைவிலிருந்தே இயக்கலாம் உங்கள் மொபைலை:

உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ்>செக்யூரிட்டி என்ற ஆஃப்ஷனை தேர்ந்தெடுத்து ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் என்ற என்பதனை ஆன் செய்து வைத்திருப்பதின் மூலம் எதிர் பாரத விதமாக உங்கள் மொபைல் தொலைய நேர்ந்தாலோ அல்லது நீங்களே எங்கேனும் மறந்து வைத்தாலோ கண்டறிய எளிதாக இருக்கும். தொலைவிலிருந்தே இயக்கலாம் உங்கள் மொபைலை:
உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ்>செக்யூரிட்டி என்ற ஆஃப்ஷனை தேர்ந்தெடுத்து ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் என்ற என்பதனை ஆன் செய்து வைத்திருப்பதின் மூலம் எதிர் பாரத விதமாக உங்கள் மொபைல் தொலைய நேர்ந்தாலோ அல்லது நீங்களே எங்கேனும் மறந்து வைத்தாலோ கண்டறிய எளிதாக இருக்கும்.

கெஸ்ட் மோட்:

ஏதேனும் முக்கியமான தருணங்களில் பிறரிடத்தில் உங்கள் மொபைல் போனை தரும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அவரால் பார்க்கப்பட்டுவிடக்கூடும் என்று நினைக்கிறீர்களா?அது போன்ற கவலைகள் இனி வேண்டாம்.நீங்கள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று கெஸ்ட் மோடினை ஆன் செய்த பிறகு உங்கள் மொபைலை பிறரிடத்தில் வழங்கினாலும் உங்களது தனிப்பட்ட தகவல்கள் பிறரால் ஒருபோதும் பார்க்கப்படாது.

ஸ்கீரீன்:

ஸ்மார்ட்போனின் சிறிய ஐகான் காலை உங்களால் சரியாக பார்க்க இயலவில்லையா செட்டிங்ஸ்>அக்சசிபிலிட்டி>என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து மாக்னிபிகேஷன் என்ற வசதியின் வழியே தேவையான பகுதிகளை நாம் பெரிதாக்கி பார்த்துக்கொள்ளலாம்.

சிறிய கேம்:

உங்களது மொபைலில் செட்டிங்ஸ்>அபௌட் டிவைஸ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்வதின் மூலம் உங்களுக்காக மெயின் ஸ்க்ரீனில் சிறிய கேம் ஒன்று தெரியும்.

மேலும் படிக்க

ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துவதற்கான 7 சுவாரஸ்ய வழிகள்.!

 

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
5 hidden Android functions most users aren't using.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்