தொலைந்துபோன ஆண்டராய்டு/ஐபோன் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.?

Written By:

எதை மறந்தாலும் மறப்போம் இரண்டு விடயங்களை மட்டும் மறக்கேவே மாட்டோம். ஒன்று நமது போனை மறக்காமல் நம்மோடு எடுத்துக்கொள்வோம், மற்றொன்று அடிக்கடி நமது போன் நம்மிடம் பத்திரமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொண்டே இருப்போம்.

இதை பெரும்பாலானோர்கள் நிகழ்த்த காரணம் - அதில் நமது தனிப்பட்ட தகவல்கள் குவித்து சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதால் தான்.!

அப்படியான நமது ஸ்மார்ட்போன் நம் சிறியதொரு கவனக்குறைவால் தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ அதை மீட்க தேவையான முக்கியமான ஒரு விடயமாக நமது ஆண்ட்ராய்டு / ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் திகழ்கிறது. சரி, தொலைந்துபோன போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

உங்களை நம்பரை பெற எளிதான ஒரு வழி இதுவாகும். நீங்கள் உங்கள் மொபைல் பேக்கேஜிங் செய்யப்பட்ட பெட்டியில் சர்வதேச மொபைல் சாதன அடையாளமான 15 எண்களை கொண்ட ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் அந்த பெட்டியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்நாட்களில் பெரும்பாலான மொபைல் கடைகள்

வழிமுறை #02மின் விலைப்பட்டியல் மற்றும் அந்த நகலை மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கின்றன. எனவே, விலைப்பட்டியலில் இருந்து உங்கள் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிக்க முடியும்.

வழிமுறை #03

உங்களை ஐஎம்இஐ எண்ணை கூகுள் டாஷ்போர்ட்டில் கண்டறியலாம். மொபைல் போன் காணாமல் போன திருடுபோன சம்பவங்களில் கூகுள் டாஷ்போர்ட் ஆனது ஒரு ஆபத்பாண்டவன் போல செயல்படும். ஆண்ட்ராய்டு பயனாளிகள் தங்களது கூகுள் அக்கவுண்ட் சைன்-இன் செய்து கூகுள் டாஷ்போர்ட் அக்சஸ் பெறவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகவல் :

அது கூகுள் அக்கவுண்ட்டில் இணைக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களின் தகவல்களையும் சேமிக்கிறது. அங்கு நீங்கள் எளிதாக உங்கள் மொபைல் ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும்.

ஐபோன் பயனர்கள் :

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் ஐபோன் பயனர்கள் செயல்படுத்தலாம் உடன் தங்கள் ஐடியூன்ஸ் அக்கவுன்ட்டை அணுக முடியும், பின்னர் ப்ரபரன்ஸ் சென்று அங்கு டிவைஸ் பொத்தானை கிளிக் செய்யவும். அடுத்து, சம்மரி டாப் சென்று உங்கள் தொலைபேசி நம்பரை இருமுறை கிளிக் செய்யவும். உங்கள் ஐஎம்இஐ தெரிய வரும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
3 Methods to get IMEI of Lost Android Smartphones and iPhones. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்