பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் லாக்கை 'உடைப்பது' எப்படி.?

இந்த மூன்று வழிகளில் நீங்கள் மறந்து விட்டஉங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தின் பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் லாக்கை திறக்கலாம்.

|

ஏன் நீங்கள் ஒரு மொபைல் பாஸ்வேர்ட்அல்லது பேட்டர்ன் லாக்கை அமைக்க வேண்டும்.? நிச்சயமாக மற்றவர்களிடம் இருந்துஉங்கள் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளவே அமைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் சமீபத்தில் மாற்றம் நிகழ்த்திய உங்கள்பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் லாக்கை தற்செயலாக மறந்துவிட்ட அனுபவம் அந்த குறிப்பிட்ட ஒரு நிலையில் சிக்கிக் கொண்டதுண்டா..?

அப்படியான ஒரு கடும் சூழ்நிலையில் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை திறக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால் கீழ்வரும் மூன்று வழிமுறைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

பேக்டரி ரீசெட் மூலம் அன்லாக் செய்வது : ஆண்ட்ராய்டு சாதனத்தை அன்லாக் செய்ய எளிய தந்திரம் இதுவாகும். இந்த முறை யில் நீங்கள் தொலைபேசி நினைவகத்தில் சேமித்து வைத்துள்ள அனைத்து தரவுகளையும் நீக்கிவிடும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருந்தால் கீழே உள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.

செயல்முறை :

செயல்முறை :

உங்கள் ஆண்ட்ராய்டு கருவியை ஸ்விட்ச்டு ஆப் செய்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்கவும். பின்னர் உங்கள் கருவியின் வால்யூம் + பட்டன் மற்றும் பவர் பட்டன் ஆகிய இரண்டையும் ஒன்றாக அழுத்தவும். அது உங்கள் கருவொயின் ரிக்கவரி மோட்தனை திறக்க வழிவகுக்கும். இப்போது மெனுவில் பேக்டரி ரீசெட் ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கிடைக்கும் பட்டியலில் 'வைப் கேச் பார்ட்டிஷன் டு கிளீன் டேட்டா' என்பதை டாப் செய்யவும் பின்னர் இறுதியாக உங்கள் கருவியை ஸ்விட்ச் ஆன் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

ஏடிஎம் (ADM) பயன்படுத்தி அன்லாக் செய்வது : நீங்கள் ஏடிஎம் (ADM) என்றால் என்ன என்று ஆச்சரியமாக கேட்கலாம். இதுவொரு ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் ஆகும். நீங்கள் எளிதாக எந்த டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினியிலும் இருந்து இதை பயன்படுத்தி உங்கள் மொபைலை அன்லாக் செய்ய முடியும். அதை நிகழ்த்த பின்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செயல்முறை :

செயல்முறை :

உங்களின் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் சைட்க்கு செல்லவும் உங்களின் கூகுள் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்யவும். பின்னர் அங்கு லாக் ஆப்ஷனை கிளிக் செய்து புதிய பாஸ்வேர்ட்தனை பதிவு செய்யவும் பின்னர் மீண்டும் ஒருமுறை உங்கள் பாஸ்வேர்டை சரிபார்த்துக் கொள்ளவும். இப்போது உங்கள் கருவியை ரீபூட் செய்யவும், பதிவு செய்த புதிய பாஸ்வேர்டை பயன்படுத்திக் கொள்ளவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

பேட்டர்ன் லாக்கை பைபாசிங் செய்வது : இந்த வழிமுறை உங்கள் லாக்டு மொபைலில் ஒரு ஆக்டிவ் டேட்டா இணைப்பு இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செயல்முறை :

செயல்முறை :

வேண்டுமென்றே 5 முறைக்கும் மேலாக தவறான பேட்டர்ன் லாக்கை நிகழ்த்தவும், பின்னர் 30 நொடிகளுக்கு பின்னர் முயற்சி செய்யவும் என்ற நோட்டிபிக்கேஷன் மெசேஜை நீங்கள் பெறுவீர்கள் பின்னர் பர்கெட் பாஸ்வேர்ட் ஆப்ஷன் உங்களுக்கு காட்டப்படும் அதை டாப் செய்து உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் உங்கள் பாஸ்வேர்ட் அளிக்க உங்கள் கருவிக்கு புதிய பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்வது எப்படி.?

Best Mobiles in India

English summary
3 Easy Tricks to Crack Android Mobile Password or Pattern Lock. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X