வைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்

Posted by:

மெசேஜிங் அப்ளிகேஷனாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்சமயம் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக உருவெடுத்துள்ளது. மற்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களை விட அதிகமாக ஸ்டிக்கர் மற்றும் எமோட்டிகான் இருக்கின்றது. தற்சமயம் 193 நாடுகளில் சுமார் 200 மில்லியன் வைபர் பயனாளிகள் இருக்கின்றனர்.

உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புதுசா வைபர் பயன்படுத்த போறீங்களா அப்ப வைபர் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

வைபரில் நோட்டிபிகேஷன்கள் இருந்தாலும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்கள் ஒருத்தரிடம் இருந்து வரும் பல நோட்டிபிகேஷன்களை ஒரே நோட்டிபிகேஷனாக காட்டும்

2

ஒரே சமயத்தில் பல விவாதங்கல் செய்பவர்கள் அடிக்கடி சாட் ரூம்களை மாற்ற வேண்டுமா, அப்ப முந்தையா சாட் ரூம் கான்வர்சேஷன் சென்று வலது புறமாக ஸ்வைப் செய்து சுலபமாக அடுத்த சாட் ரூம் செல்லலாம்

3

வைபரில் இருக்கும் யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தால் அவராகளை நீங்க ப்ளாக் செய்யலாம்

4

சில சமயங்களில் சீன் ஸ்டேட்டஸை மறைக்கும் ஆப்ஷனும் உள்ளது.

5

வைபர் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய வைபர் செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷன்களை ஆப் செய்து கொள்ளலாம்

6

ஒவ்வொரு வைபர் நோட்டிபிகேஷனுக்கும் உங்க ஸ்கிரீன் லைட் அப் ஆகுதா, அதை ஆஃப் செய்ய செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷனில் லைட் ஸ்கிரீன் ஆப்ஷனை டிஸ் ஏபிள் செய்து விடுங்கள்

7

சாட் ரூமில் உங்க நண்பர் அனுப்பிய மெசேஜ் பிடிக்கவில்லை என்றால் அதை டெலீட் செய்யலாம்

8

வைபர் அப்ளிகேஷன் நீங்க எப்பவும் ஆன்லைனில் இருக்க தானாகவே உங்க வைபை ஆக்டிவ் மோடில் தான் வைத்திருக்கும், இதை மாற்ற செட்டிங்ஸ் சென்று வைபை ஸ்லீப் பாலிஸியில் யூஸ் டிவைஸ் செட்டிங்ஸை தேர்வு செய்யுங்கள்.

9

உங்க ஆன்டிராயிடில் இருக்கும் எந்த படத்தையும் டூடுளாக மாற்ற முடியும்

10

வைபரில் நீங்க நிறைய போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரந்திருந்து அதை மீண்டும் பார்க்க முடியும், இதற்கு கான்வெர்சேஷன் கேலரியை பயன்படுத்தலாம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Viber Features You Need To Know. 10 Android Viber app tips and tricks to showcase just how much you can do with the app.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்