என்ன கதை உடுறியா.? ஸ்மார்ட்போன் பேட்டரி நூறு மணி நேரம் தாங்குமா..!

Posted by:

உங்க ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 மணி நேரம் வரை பேக்கப் கொடுக்கும். இதற்கு சில விஷங்களை பின் பற்றினாலே போதுமானது. இன்றைய ஸ்மார்ட்போன்கள் அதிக பட்சமாக இருபது மணி நேரம் வரை பேக்கப் கொடுக்கின்றது.

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளில் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் சில வழிமுறைகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

இவை நிச்சயம் பயனளிக்கும் என்பதோடு ஆன்டிராய்டு லாலிபாப் மற்றும் ஐஓஎஸ் 8 இயங்குதளங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அப்ளிகேஷன்

புதிதாக போன் வாங்கும் போது இன்ஸ்டால் செய்து இன்று பயன்படுத்தாமல் கிடக்கும் அப்ளிகேஷன்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பேக்கிரவுன்டு அப்ளிகேஷன்

கேம்ஸ், நோட்ஸ், மற்றும் ம்யூசிக் ப்ளேயர் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தாத நேரத்தில் க்ளோஸ் செய்யலாம், பின்னணியில் இயங்கும் இது போன்ற செயலிகள் அதிக பட்ச பேட்டரியை பயன்படுத்தும்.

ஆப்ஸ்

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை அடிக்கடி க்ளோஸ் செய்து அதிக முறை ஓபன் செய்வது பேட்டரியை பாழாக்கி விடும். அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் கேக்கிரவுன்டில் இங்குவதே சிறந்தது.

நோட்டிபிகேஷன்

நீங்கள் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் புஷ் நோட்டிபிகேஷன்களை வைத்திருப்பது அதிக பேட்டரியை எடுத்து கொள்ளலாம். முடிந்த வரை தேவையான அப்ளிகேஷன்களுக்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை வைத்து கொள்ளலாம்.

மின்னஞ்ல்

பல மின்னஞ்சல் சேவைகளும் ஸ்மார்ட்போன்களில் புஷ் மெசேஜ்களை அனுப்புகின்றன, அவ்வப்போது இவ்வாறு மின்னஞ்சல்களை பார்ப்பதை தவிர்த்து ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் மின்னஞ்சல்களை அந்த செயலியில் சென்று பார்ப்பது நல்லது.

லொகேஷன்

பேக்கிரவுன்டு டேட்டா மற்றும் புஷ் நோட்டிபிகேஷன்களை போன்றே லொகேஷன் சேவைகளும் அதிக பேட்டரியை பயன்படுத்தும். முடிந்த வரை லொகேஷன் சேவைகளை ஆஃப் செய்து வைக்கலாம்.

ஆட்டோ ப்ரைட்னஸ்

மேல் குறிப்பிட்டவைகளின் மூலம் பேட்டரி பிரச்சனை தீராத நிலையில் உங்களது பெரிய ஸ்கிரீன் போனின் ப்ரைட்னஸ் தான் பிரச்சனையாக இருக்கும் முடிந்த வரை அதனினை குறைப்பது நல்ல பலன்களை தரும்.

வைப்ரேஷன்

சில நேரங்களில் அதிக சத்தத்தை தவிர்க்க வைப்ரேட் ஆப்ஷன் பயன்படும், அதே நேரம் பேட்டரியை கவனிப்பது அவசியமாகும். போன் வைப்ரேட் மோடில் இருப்பது அதிகளவிலான பேட்டரியை எடுத்து கொள்ளும்.

ஆட்டோ-லாக்

போன் பயன்படுத்தாத நேரங்களில் அதன் டிஸ்ப்ளே ஆன் செய்து வைப்பது பேட்டரியை அதிகமாக எடுத்து கொள்ளும். இதனை தவிர்க்க ஸ்கிரீன் டைம் அவுட் நேரத்தை குறைத்து வைக்கலாம்.

ப்ளூடூத்

ப்ளூடூத் பயன்பாடு முடிந்தவுடன் அதை ஆஃப் செய்து வைப்பது நல்ல பலனை தரும். பயன்படுத்தாத நிலையில் ப்ளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் அதிகளவிலான பேட்டரி பயன்படுத்தப்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Tricks For Getting Better Smartphone Battery Life. check out here the tips and Tricks For Getting Better Smartphone Battery Life. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்