வைரஸில் இருந்து ஆண்ட்ராய்டை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்.!!

Written by: Aruna Saravanan

உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடை பெறுகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்து கொள்வதும் மிகவும் அவசியம்.

இங்கு ஸ்மார்ட்போனினை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாத்திட சில எளிய வழிமிறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

லாக்

ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை லாக் செய்ய வேண்டும். இது உங்களுக்கு எரிச்சலாக தான் இருக்கும். ஆனால் பின் கோடு கொண்டோ அல்லது மற்ற வழிகளிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் லாக் செய்வது மிகவும் அவசியம். இதனால் உங்கள் தகவலை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி காக்க முடியும். தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன்களில் உங்கள் கைரேகையை கொண்டு லாக் செய்யும் அம்சமும் வழங்கப்படுகின்றது.

நம்பதகுந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்

உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கும் தரவுகளுக்கான பயன்பாடுகளை பற்றிய தெளிவான அறிவு உங்களுக்கு தேவை படுகின்றது. நீங்கள் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு நம்பகமான பயன்பாடு மேம்பாட்டாளரிடம் இருந்து பெறுதல் அவசியம். அதை செய்யும் முன் அதை பற்றிய ஆய்வையும் கூறுகளையும் பற்றி நன்கு படித்து பின் செய்யதல் நல்லது.

மேம்படுத்துங்கள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், அதன் பயன்பாட்டை முன்னோக்கி எடுத்த செல்பவர்களும் ஸ்மார்ட் போன் பிரச்சினைகளை சரிசெய்யவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாப்பு விரிசல்களை சரிசெய்யவும் என்று பல விதங்களில் முயற்சி செய்து மென்பொருள் மேம்படுத்துதல் கூறுகளை ( அப்டேட் ) வழங்குகின்றனர். உங்கள் போனை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

பயன்பாடு

பொது வை-பை நெட்வர்க்குகளை பயன்படுத்துவது மலிவுதான் ஆனால் அவைகள் பெரிய அளவில் உங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் வை-பை நெட்வர்கை யாரேனும் கண்காணிக்க கூடும். நீங்கள் பரிமாறிகொள்ளும் தகவல்களை அவர்களால் கண்கானிக்க முடியும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை அவர்கள் பயன்படுத்தி கொள்ளும் அபாயமும் உள்ளது.

கடவு சொல்

ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பல வித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்தி கொடுக்கின்றது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இதற்கான கடவு சொல்லை அவ்வபோது பயன்படுத்தி போனை லாக் செய்து உங்கள் தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் போனை பயன்படுத்துபவரா நீங்கள்

அலுவலகத்தில் போனை பயன்படுத்துவது என்பது அவ்வளவு நல்ல விஷயம் இல்லை. இதனால் பல வித மிரட்டல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும். நீங்கள் உங்கள் போனை உங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு அலுவலகத்தில் பயன்படுத்தினால் பாதுகாப்பு வல்லுநர்களிடம் அதை பற்றி கலந்து ஆலோசித்து பின் பயன்படுத்துவது நல்லது.

ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர்

இதை செயல் படுத்துவதால் உங்கள் போன் தொலைந்து போனாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப் செயலியுடன் உங்கள் போனை பொருத்தி போனை விரைவாக கண்டுபிடிக்க முடியும். இதனால் தொலைவில் இருந்து உங்கள் போனை ஐந்து நிமிடத்திற்கு ரிங் அடிக்க வைக்க முடியும். Settings >> Security >> Device Administrators சென்று இதை செயல்படுத்த பட்டுள்ளதை சரி பார்க்கவும்.

ஆப் லாக்

கேலரி, மெசேஜிங் போன்றவற்றை பாதுகாக்க கூடுதலான பாதுகாப்பு தேவை. இதனால் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் வெளியே செல்லாமல் பார்த்து கொள்ள முடியும். ப்ளே ஸ்டோரில் பல் வேறு செயலிகள் உள்ளன. அவைகளை பயன்படுத்தி கடவுச் சொல் மூலம் உங்களது போனினை லாக் செய்யலாம். இதனால் உங்கள் தகவல்கள் திருடப்படுவதை காத்திட முடியும்.

ரூட்

ஆண்ட்ராய்ட் கருவியானது அதன் பயன்பாட்டாளர்களுக்கு போனின் முழு பரிமானத்தையும் பயன்படுத்தும் சலுகையை கொடுப்பதுடன் கஸ்டம் ROMSஐ நிறுவும் சுதந்திரத்தையும் அளிக்கின்றது. ஆனால் ரூட் பயன்பாட்டுடன் கூடிய செயலிகளால் போனுக்கு மிகுந்த பாதிப்பு வருவதால் அதை நிறுவுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

Third-Party APK

ஆண்ட்ராய்டு கருவியில் கூகுள் ப்ளே ஸ்டோர் இல்லாமல் மற்ற தளங்களில் இருக்கும் செயலிகளை நிறுவும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். பழக்கம் இல்லாத தகவல் பாக்ஸை டிக் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுதல் அவசியம்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Tips To Protect Your Smartphone From Malicious Threats Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்