வாட்ஸ்ஆப் சாட்களை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி

Written By:

ஸ்மார்ட்போனில் பெருமாலானோர் பயன்படுத்தி வரும் அப்ளிகேஷன்களில் முதன்மையானதாக இருப்பது வாட்ஸ்ஆப் தான். எளிமையான குறுந்தகவல் செயலியாக இருப்பதால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் இந்த செயலி பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கின்றது. குறுந்தகவல்களில் துவங்கி புகைப்படம், வீடியோ மற்றும் இலவச அழைப்புகளையும் வழங்குகின்றது.

பல சேவைகளை வழங்கினாலும் மற்ற அப்ளிகேஷன் மற்றும் இணைய சேவைகளை போன்றே தனிப்பட்ட தகவல்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கின்றது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கானும் விதமாக வாட்ஸ்ஆப் சாட் தகவல்களை பாதுகாப்பது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லாக் வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் செயலியை பாதுகாக்க ஒரே வழிமுறை அதில் பாஸ்வேர்டு வைப்பது தான். வாட்ஸ்ஆப் மூல்ம பாஸ்வேர்டு வைக்க முடியாது என்றாலும் இதற்கென வேறு சில அப்ளிகேஷன்களை கிடைக்கின்றன.

வாட்ஸ்ஆப் போட்டோ

வாட்ஸ்ஆப் புகைப்படங்கள் போட்டோ ரோலில் தெரிவதை ப்ளாக் செய்யுங்கள்.

லாஸ்ட் சீன்

வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் லாஸ்ட் சீன் என்ற கடைசியாக ஆன்லைனில் இருக்கும் தகவலை மறைத்து வைக்கலாம்.

ப்ரோஃபைல் போட்டோ

வாட்ஸ்ஆப்பில் ப்ரோஃபைல் படத்தினை உங்களது கான்டாக்டில் இருப்பவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்யும் படி வைத்தல் நல்லது.

ஸ்கேம்

இது அனைவரும் அறிந்ததே, வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து யாரும் உங்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள், நீங்களாக தொடர்பு கொள்ளும் வரை வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எவ்வித மின்னஞ்சல்களும் உங்களுக்கு வராது. போலி மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

டீ ஆக்டிவேட்

ஒரு வேலை உங்களது போன் தொலைந்து விட்டால் உடனடியாக உங்களது வாட்ஸ்ஆப் அக்கவுன்டினை டீ ஆக்டிவேட் செய்து விடுவது நல்லது.

தகவல்

மிகவும் முக்கியமான விஷயம் இது தான், உங்களது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் வாட்ஸ்ஆப்பில் பகிர்நது கொள்ளாதீர்கள். எவ்விதமான டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி தகவல்களை பறிமாறி கொள்வது பாதுகாப்பற்றது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் குறித்த உங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
tips to keep your WhatsApp chats private and safe. Here you will find the tips to keep your WhatsApp chats private and safe, this is simple and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்