பழைய போன் வாங்கினா.? கவனம் தேவை மக்களே.!!

Written By:

ஆன்லைனில் அசத்தல் சலுகையை பார்த்து பழைய போனினை நிச்சயம் வாங்கிட முடிவு செய்து விட்டீர்களா.? ஒரு வகையில் இது நல்ல முடிவு தான் என்றாலும் பழைய போன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான மவுசு அதிகரித்து வரும் நிலையில் அவைகளை வாங்கும் போது சற்று கவனமாக இருப்பது கட்டாயமாகின்றது.

இங்கு பழைய பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சந்தை

ஓஎல்எக்ஸ் மற்றும் க்விக்கர் போன்ற இணையதளங்களில் பழைய ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். இங்கு விற்பனையாளரை பார்த்து போனினை நன்கு பயன்படுத்தி பார்க்கலாம்.

அக்சஸரீ

வாங்கும் போனின் பில் அதாவது கட்டன ரசீது மற்றும் போனுடன் வழங்கப்பட்ட அனைத்து அக்சஸரீகளும் சரியாக வேலை செய்கின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

குறைந்த அளவு

ரூ.10,000 முதல் ரூ.12,000 பட்ஜெட் விலை கொண்ட கருவிகளில் கூட இன்று 2 ஜிபி ரேம் வழங்கப்படுகின்றது. இதனால் 1 ஜிபி கொண்ட கருவி என்றாலும் அதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் உள்ளதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

திருட்டு கருவி

இன்று திருடப்பட்ட கருவிகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாங்கும் கருவியில் சரியான ஐஎம்ஈஐ எண் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

நம்பிக்கை

நீங்கள் வாங்கும் கருவியை விற்பவர் உங்களக்கு அறிமுகமானவராக இருப்பது நல்லது. முன்பின் தெரியாவதவர்களை நம்பி போன்களை வாங்குவது வீண் பிரச்சனைகளுக்கு வழி செய்யலாம்.

பயன்பாடு

போன் சரியாக வேலை செய்கின்றதா என்பதை பயன்படுத்தி பார்க்க வேண்டும். போனின் திரை, பேட்டரி உள்ளிட்டவைகளை சரிபார்த்து கருவியில் இருக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்பதையும் உறுதி செய்து கொள்வது நல்லது.

பேபால்

போனினை ஈ-பே தளம் மூலம் வாங்கினால் பேபால் மூலம் பணம் செலுத்தலாம், இவ்வாறு செய்யும் போது கருவியில் கோளாறு ஏற்பட்டால் பணத்தை திரும்ப பெற முடியும்.

சமூக வலைதளம்

இன்று பேஸ்புக் இல்லாமல் எவ்வித வியாபாரமும் நடைபெறுவதில்லை என்ற நிலையில் போன் வாங்கவும் அவற்றை பயன்படுத்தலாம். போன் விற்பனைக்கென செயல்படும் பேஸ்புக் பக்கங்களை பயன்படுத்தி விற்பனையாளரை கண்டுபிடிக்க முடியும்.

வாரண்டி

பழைய போனாக இருந்தாலும் அதற்கு சரியான வாரண்டி இருந்தால் நல்லது. சில சமயங்களில் போன் தயாரிப்பாளர் அல்லாத மூன்றாவது நிறுவனத்தின் வாரண்டி கொண்ட கருவிகளையும் வாங்கலாம். வாரண்டி இல்லாத கருவிகளுக்கு இவை எவ்வளவோ மேல்.

பிராண்ட்

பழைய போன் வாங்கினாலும் நல்ல பிராண்ட் கருவியாக வாங்குவது நல்லது. இதனால் போன் பழுதானாலும் சரி செய்வது சற்றே எளிமையான ஒன்றாக இருக்கும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
things to know when buying a second-hand smartphone in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்