கணினி மூலம் ஏற்படும் கண் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி

உலகமே கணினி மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் கணினியை அதிக நேரம் பயன்படுத்துகின்றோம். அந்த வகையில் கணினி மூலம் பலருக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

பெரும்பாலும் கணினி பயன்படுத்தினால் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில் கண்களை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பிரசேதனை

கணினி துறையில் வேலை பார்ப்பவர்கள் பணியில் சேருவதற்கு முன் கண்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேலும் பணியில் இருப்பவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை கண்களை பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.

வெளிச்சம்

கணினி பயன்படுத்தும் இடங்களில் முடிந்த வரை அதிகப்படியான வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும், போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும் அதே நேரம் கண்களை பாதிக்காத அளவு அவை இருக்க வேண்டும்.

கண் கூச்சம்

சுவர்களில் இருந்து பிரதிபலிப்பாகும் வெளிச்சம் கண்களை கூசாத அளவு பார்த்து கொள்ள வேண்டும். முடிந்த வரை கணினி திரையில் கண் கூச்சத்தை எதிர்க்கும் கவசத்தை பயன்படுத்தலாம். 

டிஸ்ப்ளே

முடிந்த வரை எல்சிடி திரை கொண்ட டிஸ்ப்ளேவை பயன்படுத்துங்கள்.

டிஸ்ப்ளே செட்டிங்ஸ்

முடிந்த வரை கண்களுக்கு வசதியான அளவு டிஸ்ப்ளே செட்டிங்ஸை மாற்றியமைக்கலாம்.

சிமிட்டல்

கணினி பயன்படுத்தும் போது முடிந்த வரை கண்களை சிமிட்டினால் கண்களின் ஈரத்தன்மை இருக்கும், கண் அரிக்காமல் இருக்கும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 10 நிமிட கண்களுக்கு இடைவெளி கொடுத்தால் நல்லது.

கண் பயிற்சி

கணினி பயன்படுத்தும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இடைவெளி கொடுத்து தூரத்தில் இருக்கும் பொருட்களை தொடர்ந்து 20 நொடிகள் பார்க்க வேண்டும்.

இடைவெளி

கணினியில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் நாள் ஒன்றுக்கு இரு முறை இடைவெளி மட்டும் எடுத்து கொள்கின்றனர். மேலும் கூடுதலாக ஐந்து நிமிட இடைவெளியை நான்கு முறை எடுத்து கொண்டால் உடல் வலி மற்றும் கண் எரிச்சல் ஆகியவை குறையும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மாற்றியமைத்தல்

அடிக்கடி அச்சிடப்பட்ட காகிதங்களை பார்த்து மீன்டூம் கணினி திரையை பார்த்து வேலை செய்தால் அதிக கண் எரிச்சல் ஏற்படும். இதை குறைக்க கணினி திரை உங்கள் முகத்திற்கு நேராக இருக்கும் படி வைத்து கொள்ளலாம்.

கண்னாடி

கணினி கண்னாடிகளை பயன்படுத்தினால் கண்களில் ஏர்படும் பிரச்சனைகள் நிச்சயம் குறையும். இது திரை மூலம் ஏற்படும் பாதிப்புகளை பாதியாக குறைக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Steps to get Relief from Computer Eye Strain. Check out some easy and simple steps to get Relief from Computer Eye Strain.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்