ஸ்மார்ட்போனில் மெமரி இல்லையெனில் இதை செய்யுங்கள்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் கருவியில் எது இருந்தாலும், இல்லை என்றாலும் மெமரி கட்டாயம் இருக்க வேண்டும். மெமரி இல்லாமல் ஸ்மார்ட்போனை வைத்து எதுவும் செய்ய முடியாது. தினமும் பயன்படுத்தப்படும் செயலிகளில் துவங்கி, இசை, புகைப்படம் என எல்லாவற்றிற்கும் மெமரி இருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். ஓரளவு அதிக மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் பிரச்சனை இல்லை, ஆனால் 8 அல்லது 16 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் அடிக்கடி மெமரி பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.

அந்நேரத்தில் ஸ்மார்ட்போன்களில் மெமரியை சுத்தப்படுத்துவது சற்றே சிரமமான காரியமே. ஸ்மார்ட்போன்களில் மெமரி இல்லா நேரங்களில் தகவல்களை எப்படி பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

புகைப்படம்

புகைப்படம்

ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து ஃபோல்டர்களையும் நன்கு அலசி பழைய புகைப்படங்கள், தேவையில்லாத வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட் போன்றவைகளை அழித்து விடுவது நல்லது. இது போன்று செய்யும் போது ஸ்மார்ட்போனில் மெமரி அழிக்கப்பட்டு இதனால் மெமரி இருப்பு அதிகரிக்கும்.

கணினி

கணினி

ஸ்மார்ட்போனில் இருக்கும் பழைய தகவல்களை கணினி அல்லது க்ளவுட் சேவைகளில் பதிவு செய்து வைக்கலாம். இது போன்று செய்யும் போது அதிகப்படியான தகவல்கள் கருவியில் இருந்து எடுக்கப்படுவதால் போனில் மெமரி அதிகம் கிடைக்கும்.

செயலிகள்

செயலிகள்

ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலிகளில் பயன்படுத்தப்படாத செயலிகள் அதிகளவில் இருக்கும். அவைகளை கண்டறிந்து கருவியில் இருந்து அழித்து விட்டாலும் போனின் மெமரி அதிகமாக கிடைக்கும்.

பாடல்

பாடல்

ஸ்மார்ட்போனில் பாடல்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு பதில் ஆன்லைன் பாடல் சேவைகளை பயன்படுத்தலாம். சமீப காலமாக இது போன்ற சேவைகளில் அதிக தள்ளுபடி வழங்கப்படுவதோடு இவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.

வீடியோ

வீடியோ

ஸ்மார்ட்போனில் வீடியோக்களை பதிவு செய்ததும், அவைகளை க்ளவுட் அல்லது கணினியில் பேக்கப் செய்வது நல்லது, இது போன்று செய்யும் போது ஸ்மார்ட்போனில் மெமரி சேமிக்கப்படுகின்றது.

மெமரி கார்டு

மெமரி கார்டு

ஸ்மார்ட்போன் தகவல்களை பாதுகாக்க மெமரி கார்டுகளையும் பயன்படுத்தலாம், தகவல்களை பேக்கப் செய்வதற்கென ஒரு மெமரி கார்டினை வைத்திருப்பதோடு இவைகளில் பேக்கப் செய்வதும் எளிமையாக முடிந்து விடும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil some Simple ways to clear out space on your smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X