ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!!

By Meganathan
|

இந்தியாவில் பயணம் செய்ய சிறந்த, எளிமையான மற்றும் விலை குறைவான போக்குவரத்தாக ரயில் விளங்குகின்றது. சில ஆண்டுகளாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது எளிமையாக மாறி இருக்கின்றது என்றே கூற வேண்டும். ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) இணையதளம் தான் இந்தியாவின் முன்னணி இயங்குதளமாக இருப்பதாக காம்ஸ்கோர் தெரிவித்திருக்கின்றது.

யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

இது உண்மை தானா, என்ற வியப்போடு இருப்பவர்கள், கீழ் வரும் ஸ்லைட்ரகளை படித்து ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியவைகளை தெரிந்து கொள்ளுங்கள். இனி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதும் எளிமையான காரியமே..

திட்டம்

திட்டம்

பயணம் செய்யும் தேதிகளை முடிவு செய்து முடிந்த வரை பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது நல்லது. ரயில் பயணச்சீட்டுகளை அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும், முன்பாகவே முன்பதிவு செய்வதன் மூலம் நிச்சியம் பயணச்சீட்டுகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

காத்திருப்பு

காத்திருப்பு

ஒரு வேளை வெயிட்டிங் லிஸ்ட் பயணச்சீட்டு கிடைக்கும் பட்சத்தில் குறைவான எண்ணிக்கை இருக்கும் ரயிலை தேர்வு செய்யலாம். ஐஆர்சிடிசி தளத்தில் உங்களது பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வசதியும் இருக்கின்றது.

குறியீடு

குறியீடு

பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது உங்களக்கு ஏற்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க Indianrail.gov.in தளம் இருக்கின்றது. இந்த தளத்தில் ரயில் நேரங்கள், தடம் எண் உள்ளிட்ட பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தட்கல்

தட்கல்

தட்கல் முறையில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஆட்டோஃபில் பட்டனை பயன்படுத்தலாம். இதன் மூலம் அதிக நேரத்தை மிச்சம் செய்ய முடியும்.

பணம்

பணம்

பல்வேறு இயங்குதளங்களில் கிடைக்கும் BookMyTrain செயலி மூலமாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த செயலியில் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெயிட் லிஸ்ட்

வெயிட் லிஸ்ட்

ரயில் டிக்கெட் வெயிட் லிஸ்டில் இருந்தால் அதனினை உடனடியாக விமான பயணச்சீட்டாக மாற்ற முடியும், இந்த சேவையில் விமானத்திற்கான பயணச்சீட்டுகளை அதிகபட்சம் 30-40 சதவீதம் வரை விலை குறைவாக பெற்று கொள்ள முடியும். இந்த திட்டம் பயணம் செய்வதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ரயில் யாத்ரி

ரயில் யாத்ரி

உங்களது ரயில் நேரங்களை சரியாக அறிந்து கொள்ள ரயில் யாத்ரி இணையதளம் அல்லது செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.

உணவு

உணவு

ஸ்மார்ட்போன் ஆப் ட்ராவல் காணா மூலம் முக்கியமான ரயில் நிலையங்களில் உணவுகளை ருசிக்க முடியும், இதில் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேப்

மேப்

ரயில் பயணங்களுக்கு ஏற்ற மேப் கையில் வைத்திருப்பது அவ்வப்போது உதவியாக இருக்கும். முடிந்த வரை மேப் பயன்படுத்தி சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.

முகநூல்

முகநூல்

இது போன்ற மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் வாசிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some Simple tips to follow before booking online train ticket. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X