இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

Written By:

இன்றைய தளமுறையினருக்கு சோரு, தண்ணீரை விட மிகவும் முக்கியமானதாக இருப்பது தான் இண்டர்நெட். இண்டர்நெட் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று வாழ்க்கையை இருக்கும் இடத்தில் இருந்தே நடத்த அனைத்து வசதிகளையும் வழங்குவது தான் இண்டர்நெட்.

இண்டர்நெட், மக்களை சோம்பேறிகளாக மாற்றுகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் யாரும் இன்று இண்டர்நெட் பயன்படுத்தாமல் இல்லை. துவக்கத்தில் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்தி நாளடைவில் அதன் வேகம் குறையும் போது ஏற்படும் வலியை வார்த்தைகளில் விவரிப்பது கடினமே.

 இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

குறைந்த இண்டர்நெட் வேக்த்தின் வலியை அனுபவிப்போருக்கு இந்த தொகுப்பினை அர்ப்பணிக்கின்றோம்.

ஹார்டுவேர் மேம்படுத்தல்
இண்டர்நெட் வேகத்தினை அதிகரித்திட சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. முதலில் ஹார்டுவேர் மேம்படுத்தல்களின் மூலம் இண்டர்நெட் வேகத்தினை அதிகரிப்பது என்பதை பாருங்கள்.

ஈத்தர்நெட் கேபிள்

 இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

ஸ்மார்ட்போன், லாப்டாப், டேப்ளெட் போன்ற கருவிகளில் வை-பை பயன்படுத்த ஏதுவாகவும், எளியமைகாவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் வை-பை பயன்படுத்தும் போது 30% வேகம் குறைகின்றதாக கண்டறியப்பட்டுள்ளது. முடிந்த வரை ஈத்தர்நெட் கேபிள்களை பயன்படுத்துவது இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியும்.

வை-பை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கருவிகளில் இண்டர்நெட் வேகத்தை நீட்டிக்க சில வழி முறைகள் இருக்கின்றன.

ரவுட்டர்

 இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

பழைய ரவுட்டர்களில் இருக்கும் சில கூறுகள் இண்டர்நெட் வேகத்தை குறைக்கும். முடிந்த வரை ரூ.1200 முதல் ரூ.4000 வரையிலான வை-பை ரவுட்டரகள் வீ்ட்டு பயன்பாட்டிற்கு சிறப்பானதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மோடெம்

 இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

முடிந்த வரை தரமுள்ள வை-பை ரவுட்டர்களை பயன்படுத்தலாம். கூகுள் உதவியுடனும் சிறந்த வை-பை மோடெம்களை தேர்ந்தெடுக்கலாம். ஒரு வேளை பழைய ரவுட்டரை பயன்படுத்தினால் புதிய ரவுட்டரை வாங்கலாம். இதன் மூலம் இண்டர்நெட் வேகம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
சில வல்லுநர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ரவுட்டரை மாற்றுவது சிறந்தது என்றும் கூறுகின்றனர்.

ரீஸ்டார்ட்

 இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

அதிக நேரம் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் போது ஒரு முறை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்வது நல்ல பலன்களை தரும். இவ்வாறு செய்யும் போது இண்டர்நெட் வேகம் அதிகரிக்கும். முடிந்த வரை வாரத்திற்கு ஒரு முறை ரவுட்டரை ரீசெட் செய்வது நல்லது.

அப்டேட்

 இண்டர்நெட் வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி..??

இண்டர்நெட் வேகும் குறையும் போது ரவுட்டரை போன்றே உங்களது கணினியும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை பழைய கணினியும் இண்டர்நெட் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.

அருகாமை
சில சமயங்களில் கருவிகளை ரவுட்டரின் அருகாமையில் கொண்டு செல்வதும் நல்ல பலன்களை அளிக்கும். பெரும்பாலும் வீட்டின் சுவர், வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களும் இண்டர்நெட் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இது வேலை செய்யாவிட்டால் ரவுட்டரையும் நடு வீடு அல்லது அனைவரும் பயன்படுத்தும் பொதுவான இடத்தில் சற்றே உயரமாக வைக்கலாம்.

ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று பேர் ஒரே நேரத்தில் அதிகளவு இண்டர்நெட் பயன்படுத்தும் போது இண்டர்நெட் வேகம் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும், இதன் காரணமாகவும் இண்டர்நெட் வேகம் குறையலாம்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Simple Tips To Double Your Internet Speed. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்