ப்ரைவேட் ப்ரவுஸிங் பற்றி உங்களுக்கு தெரியுமா, அப்ப இதை கண்டிப்பா படிங்க

Posted by:

ஆன்லைன் உலகம் ரொம்பவே வித்தியாசமானது, இருந்தாலும் அதுல நிறைய பிரச்சனைகளும் இருக்கின்றது. இன்டெர்நெட்டில் ப்ரவுஸிங் செய்வது ஆவலாக இருந்தாலும் நீங்க ப்ரவுஸ் செய்வது யாருக்கும் தெரியாது என்று நினைத்தால் அது மகா முட்டாள்தனம்.

இன்டெர்நெட் பெரும்பாலும் பலரும் உளவு பார்க்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அரசாங்கம், விளம்பரதாரர்கள், என பட்டியல் நீண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, முடிநு்த வரை உங்களோட ப்ரவுஸிங் உங்களோடு மட்டும் இருக்க வேண்டும் என்று நிச்சயம் நினைப்பீங்க.

இதற்கு நீங்க ப்ரைவேட் ப்ரவுஸிங் மோட் பயன்படுத்தலாம், நீங்க பொது இடத்தில் கணினியை பயன்படுத்தும் போது இது மிகவும் சிறப்பான தேர்வாக இருக்கும். நீங்க ஏன் ப்ரைவேட் ப்ரவுஸிங் பயன்படுத்த வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

அமேசான் தளத்தில் இருந்து பொருள் வாங்கும் போது, அதன் குக்கீஸ் உங்களுக்கு எதிராக பயன்படுத்தபடலாம், இதை நீங்க உணரும் முன் பல விளம்பர அறிவிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது அறுவெறுப்பாக இருக்கும், ப்ரைவேட் ப்ரவுஸிங் இந்த பிர்ச்சனைக்கு தீர்வாக இருக்கும்

#2

நீங்க பணிபுரியும் இடத்தில் கணினியை பயன்படுத்தும் போது உங்களின் ப்ரவுஸிங் உங்களுடன் மட்டும் இருக்க ப்ரைவேட் ப்ரவுஸிங் சிறந்தது.

#3

சில இணையதளங்கள் தங்களது செய்திகளை படிக்க முற்றிலும் இலவசமாக அளிப்பதில்லை, குறைந்த அளவு செய்திகளை படித்தவுடன் உங்களால் மேற்கொண்டு படிக்க இயலாது. ப்ரைவேட் ப்ரவுஸிங் பயன்படுத்தும் போது இந்த நிலை ஏற்படாது.

#4

சில சமயம் ஆய்வு பணிகளுக்கு இணையம் பயன்படுத்தும் போது சில தளங்கள் உங்களின் தகவல்களை கேட்கும், இதை எதிர்கொள்ள ப்ரைவேட் ப்ரவுஸிங் உதவும்.

#5

ஒரு வேலை உங்களுக்கு இது தெரியாத சமயத்தில் சில இணைய ப்ரவுஸர்களில் நீங்களே ப்ரைவேட் ப்ரவுஸிங் செயல்படுத்த முடியும்.

#6

கூகுள் க்ரோமில் ப்ரைவேட் ப்ரவுஸிங் செயல்படுத்த ப்ரவுஸரின் மேல் வலது புறத்தில் இருக்கும் ஐகான் சென்று New Incognito Window தேர்வு செய்ய வேண்டும்

#7

இங்கு வலது புறத்தின் மேல் பகுதியில் இருக்கும் கியர் பட்டனை அழுத்தி சேஃப்டி சென்று InPrivate Browsing ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

#8

சஃபாரியில், மெனு பார் சென்று சஃபாரி பட்டனை அழுத்தி Private Browsing ஆப்ஷனை கொடுத்தால் வேலை முடிந்தது.

#9

பயர்ஃபாக்ஸில் வலது புறத்தில் இருக்கும் பட்டனை அழுத்தி New Private Window தேர்வு செய்தாலே போதுமானது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
How to Use Private Browsing Option. Here you will come to know why you should use private browsing option and also find some easy steps to use Private Browsing.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்