வேறு மொபைல்களுக்கு 'காண்டாக்ட்'களை பரிமாற்றம் செய்வது எப்படி.??

By Aruna Saravanan
|

புதிய மொபைல் வாங்குவது மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும், அதை பழகி கொள்வது சற்றே சவாலான விஷயமாகவே உள்ளது. எல்லா அம்சங்களும் ஒன்று தான் என்றாலும் வடிவமைப்பு மற்றும் பல காரணங்களினால் சில அம்சங்களை பயன்படுத்த யாராக இருந்தாலும் சற்றே தடுமாற்றம் இருக்க தான் செய்யும்.

அந்த வகையில் நீங்களும் புதிய போன் வாங்கி உள்ளீர்களா. உங்கள் தொடர்புகளை பழைய போனில் இருந்து புதிய போனுக்கு மரிமாற்றம் செய்ய வேண்டுமா. அப்படி என்றால் இதை படியுங்கள்.

சிம் சார்ந்த பரிமாற்றம் :

சிம் சார்ந்த பரிமாற்றம் :

உங்கள் பழைய போனின் அட்ரெஸ் புக் சிறியதாக இருந்தால் உங்கள் புதிய போனில் தொலைபேசி எண்களை மட்டும் காப்பி செய்ய வேண்டும் என்னும் பட்சத்தில் உங்கள் புதிய போனின் மெமரியில் காப்பி செய்யுங்கள். இதற்கு உங்கள் சிம் கார்டை பயன்படுத்த வேண்டும். உங்கள் பழைய போனின் மெமரியில் இருந்து எண்களை உங்கள் சிம்முக்கு பரிமாற்றம் செய்யுங்கள்.

கணினி மூலமாக தொடர்புகளை மரிமாற்றம் செய்தல் :

கணினி மூலமாக தொடர்புகளை மரிமாற்றம் செய்தல் :

அடிப்படை போன் எண்களை காப்பி செய்வதற்கு மட்டும் தான் இந்த சிம் கார்ட் சார்ந்த பரிமாற்றம் உதவி புரியும். ஆனால் உங்கள் போனில் பெரிய அளவில் பெயர்கள், இமெயில் அட்ரஸ்கள், மற்றும் மற்ற தகவல்கள் பல இருந்தால் முதல் முறை ஒத்து வராது. இதற்கு ஒரு வகை மென்பொருளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்.

விண்டோஸ் :

விண்டோஸ் :

விண்டோஸ் மொபைல் பயன்பாட்டாளர்கள் மைக்ரோசாஃப்ட் டிவைஸ் சென்டர் பயன்படுத்தி காப்பி செய்ய முடியும். ஒரு விண்டோஸ் போனில் இருந்து மற்றொன்றுக்கு பரிமாற்றம் செய்ய மைக்ரோசாஃப்டின் மை போன் சர்வீஸ் (My phone service) பயன்படுத்தி க்ளவுடு மூலமாக பரிமாற்றம் செய்ய முடியும்.

சிடிஎம்ஏ :

சிடிஎம்ஏ :

உங்களிடம் பழைய சிடிஎம்ஏ (CDMA) சார்ந்த மொபைல் போன் இருந்தால் அதாவது சாம்சங் அல்லது எல்ஜி போன்ற போன்கள் இருந்தால் இலவச பிட்பிம் (BitPim) பயன்படுத்தி காப்பி செய்யலாம். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கருவிகளுக்கு பிட்பிம் வசதி உள்ளது.

பரிமாற்றம் :

பரிமாற்றம் :

ஓவர் தி ஏர் (over the air) மூலம் போன் புக்கை பரிமாற்றம் செய்ய உங்களிடம் இண்டர்நெட் உள்ள போன் இருந்தால் உங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு கணினியின் வசதி இல்லாமல் ஓவர் தி ஏர் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்.

செட் அப் :

செட் அப் :

மொபிக்கல் (MObical) என்ற ஆன்லைன் இணைப்பு இலவசமாக கிடைக்கின்றது. நோக்கியா, மோட்டோரோலா போன்ற பல போன்களுக்கு இந்த வசதி உள்ளது. இதற்கு முதலில் உங்கள் பழைய போனில் மொபிக்கல் செட் அப் (MObical set up) செய்தல் வேண்டும். இது பேக் அப்பை உருவாக்கும். இப்பொழுது புதிய போனில் மொபிக்கல் செட் அப் செய்யவும் இப்பொழுது ஈஸியாக காப்பி செய்ய முடியும்.

க்ளவுடு :

க்ளவுடு :

ஒரு க்ளவுடு சார்ந்த கூகுள் சின்க் வசதி உள்ளது. இது ப்ளாக்பெரி, ஐபோன், நோக்கியா போன்ற எல்லா போன்களிலும் இயக்க முடியும். இது கூகுள் காண்டாக்ட் உடன் உங்கள் போன் அட்ரெஸ் புக்கை சின்க்கில் வைத்திருக்க உதவும்.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கூகுள் காண்டாக்ட்ஸ் உடன் தொடர்புகளை வைத்திருக்கும் வசதி உள்ளது. எச்டிசி டெஸ்க்டாப் வசதிக்கென்று எச்டிசி சின்க் வைத்துள்ளது. இதனால் உங்கள் காண்டாக்ட்ஸ'ஐ ஈசியாக காப்பி செய்ய முடியும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>இந்திய ஸ்மார்ட்போன்கள், இந்தாண்டு மாற்றங்கள்.!!</strong>இந்திய ஸ்மார்ட்போன்கள், இந்தாண்டு மாற்றங்கள்.!!

<strong>'யாருக்கு வேண்டுமானாலும்' மெசேஜ் அனுப்ப உதவும் 10 சாட் ஆப்ஸ்..!</strong>'யாருக்கு வேண்டுமானாலும்' மெசேஜ் அனுப்ப உதவும் 10 சாட் ஆப்ஸ்..!

<strong>மின்சாரம் எடுக்க எளிய முறை கண்டுபிடிப்பு : வேலூர் மாணவி அபாரம்.!</strong>மின்சாரம் எடுக்க எளிய முறை கண்டுபிடிப்பு : வேலூர் மாணவி அபாரம்.!

<strong>எர்வாமாட்டின் வேண்டாம், இந்த 'லேசர்' போதும்.!!</strong>எர்வாமாட்டின் வேண்டாம், இந்த 'லேசர்' போதும்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Read Here in Tamil How to Transfer Contacts from one Cell Phone to another.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X