கேலக்ஸி நோட் 4 கருவியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி

Posted by:

புதிதாக வெளாயன போது தலை சிறந்த ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நோட் 4 இருந்தது, இப்போது பல நிலை பயன்பாடுகளை கடந்து கேலக்ஸி நோட் 4 வேகம் குறைந்திருப்பதை உணர்கின்றீர்களா, கவலை வேண்டாம் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பழைய வேகம் மீண்டும் கிடைக்கும்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் கேலக்ஸி நோட் 4 வேகத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டச்விஸ்

கேலக்ஸி நோட் 4 கருவியில் டச்விஸ் செயலிக்கு பதிலாக கூகுள் நௌ லான்ச்சர் பயன்படுத்தலாம். இது வேகமாக இருப்பதோடு எஸ் பென் அம்சங்களையும் வழங்குகின்றது குறிப்பிடத்தக்கது.

டவுன்லோடு பூஸ்டர்

சிறப்பான டேட்டா உங்களிடம் இருந்தால் வை-பை அல்லது டேட்டா கனெக்ஷன்களை கொண்டு உங்களால் அதிக வேகத்தில் பதிவிறக்கங்களை மேற்கொள்ள முடியும்.

மெமரி

போனின் வேகம் குறைய பெரும்பாலான காரணங்களில் ஒன்று மெமரி குறைபாடு தான். அதனால் மைக்ரோ எஸ்டி கார்டு மெமரியை முடிந்த வரை காலி செய்து விட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

எஸ் வாய்ஸ் ஷார்ட்கட்

நோட் 4 கருவியில் ஹோம் பட்டனை இரு முறை அழுத்தினால் எஸ் வாய்ஸ் செயலி ஓபன் ஆகும் படி செட் செய்யப்பட்டிருக்கும். இதனை டிசேபிள் செய்துவிட்டால் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆப்ஸ்

முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை அப்டேட் செய்து வைப்பது நல்லது. செயலிகள் அப்டேட் செய்தால் கருவி ஹேங் ஆகாமல் வேலை செய்யும்.

அனிமேஷன்

கருவியின் செட்டிங்ஸ்--அபவுட் போன்--பில்டு நம்பர் ஆப்ஷனை ஏழு முறை க்ளிக் செய்து செட்டிங்ஸ்--டெவலப்பர் ஆப்ஷன் சென்று விண்டோ அனிமேஷன் ஸ்கேல் மற்றும் ட்ரான்சிஷன் அனிமேஷன் ஸ்கேல் ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது கருவியின் வேகம் சற்று அதிகரிக்கலாம்.

கிரீனிஃபை

சில செயலிகள் பயன்படுத்தாத நேரங்களில் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும். சில சமயங்களில் இது பயனுள்ளதாக இருந்தாலும் இது அதிகளவிலான பேட்டரியை பயன்படுத்தும், இதை தவிர்க்க கிரீனிஃபை ஆப் பயன்படுத்தலாம்.

ஸ்லோடவுன்

சில நேரங்களிலி போனின் வேகம் குறையும் காரணம் தெரியாமலே இருக்கும், இது போன்ற நேரங்களில் போனின் வேகத்தை குறைப்பது எந்த செயலி என்பதை பாருங்கள்.

கேச்சி

போனின் கேச்சிகளை க்ளியர் செய்தாலும் போனின் வேகம் அதிகரிக்கும். இதை செய்ய செட்டிங்ஸ்--அப்ளிகேஷன் மேனேஜர் ஆப்ஷனில் குறிப்பிட்ட செயலியை தேர்வு செய்து கேச்சிகளை க்ளியர் செய்யலாம்.

ஃபேக்ட்ரி ரீசெட்

கடைசி ஆப்ஷனாக போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது நல்ல பலன்களை தரும். இதை செய்யும் முன் போனில் இருக்கும் டேட்டாக்களை பேக்கப் செய்ய வேண்டும். முதலில் போனின் செட்டிங்ஸ்--பேக்கப் அன்டு ரீசெட் ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Check out here the Simple ways to speed up the Galaxy Note 4. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்