கூகுள் க்ரோம்காஸ்ட் என்றால் என்ன, இதை எப்படி பயன்படுத்த வேண்டும்

Written By:

கூகுள் நிறுவனம் சமீபத்தில் 2 இன்ச் நீளத்தில் சிறிய கருவி ஒன்றை வெளியிட்டது. இந்த கருவியை தொலைகாட்சியில் பொருத்தி யூ-ட்யூப் மற்றும் நெட்ஃபிக்ஸ் வீடியோக்களை கட்டுப்படுத்தி மொபைல், டேப்ளெட் மற்றும் லாப்டாப் ஆகியவற்றில் பார்க்க முடியும்.

அமேசான் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி

இந்தியாவில் ரூ.2999க்கு வெளியான இந்த கருவியை பயன்படுத்துவது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

க்ரோம்

முதலில் க்ரோம்காஸ்ட் கருவியை தொலைகாட்சியின் HDMI போர்ட்டில் சொருக வேண்டும்

சக்தி

அடுத்து க்ரோம்காஸ்ட் கருவியின் மறுபுறத்தில் இருக்கும் யுஎஸ்பி கேபிளுடன் இணைத்து பவர் ப்ளகில் சொருக வேண்டும்.

தொலைகாட்சி

அடுத்து தொலைகாட்சியில் HDMI ஆப்ஷனிற்கு மாற்றுங்கள்

கணினி

இதன் பின் உங்கள் கணினியை வைபையுடன் இணைக்க வேண்டும்

க்ரோம்

கூகுளின் க்ரோம் ப்ரவுஸரை கணினி அல்லது லாப்டாப்பில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

க்ரோம்காஸ்ட்

கூகுளின் க்ரோகாஸ்ட் யூட்டிலிட்டியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்

லான்ச்

க்ரோம்காஸ்ட் யூட்டிலிட்டியை லான்ச் செய்யுங்கள், இது முடிந்ததும் தொலைகாட்சியில் இருக்கும் க்ரோம்காஸ்ட் கருவியின் பெயர் தெரியும், இங்கு Continue என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள், இணைப்பு முடிந்தவுடன் குறியீடு தொலைகாட்சி மற்றும் கணினியில் தெரியும்

க்ளிக்

அடுத்து That's my Code என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள், இதை செய்தவுடன் இன்டெர்னட் வசதி துண்டிக்கப்பட்டு விடும்

நெட்வர்க்

க்ரோம்காஸ்ட் பயன்படுத்த வயர்லெஸ் இணைப்பை உறுதிபடுத்த வேண்டும்.

துவக்கம்

இன்டெர்நெட் இணைப்பு முடிந்தவுடன் க்ரோம்காஸ்ட் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How To Set Up Google Chromecast. Here you will find some easy and simple steps to set up Google Chromecast.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்