ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி

Posted by:

இணையதளங்களின் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது எனலாம், நேரத்தை சேமிக்கவும், இணையங்களில் கிடைக்கும் சலுகைகளுக்காவும் பலரும் இன்று இணையங்களில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

சில சமயங்களில் முன்பதிவு செய்த பொருள் தவறாக கிடைத்தாலோ அல்லது பிடிக்கவில்லை என்றாலோ அவற்றை திருப்பி கொடுப்பது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடசர்களில் ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆர்டர்

முதலில் ப்ளிப்கார்ட் தளத்தின் ஆர்டர் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

ஆர்டர்

ஆர்டர் பக்கத்தில் ஒரு மாதத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் தேதி மற்றும் டெலிவரி செய்த தேதி வரை அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ரிட்டர்ன்

நீங்கள் ரிட்டர்ன் செய்ய வேண்டிய பொருளை க்ளிக் செய்து ரிட்டர்ன் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

காரணம்

அடுத்த பக்கத்தில் பொருட்களை திருப்பி கொடுப்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.

மெனு

ட்ராப் டவுன் மெனுவில் இருந்து பொருளை திருப்பி கொடுப்பதற்கு சரியான காரணத்தை தேர்வு செய்து அதனை கமென்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிட வேண்டும்.

ட்ராப் டவுன்

அடுத்த ட்ராப் டவுன் மெனுவில் புதிய பொருளை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆப்ஷன் மட்டும் தான் இருக்கும், அது முடிந்த பின் ரிக்வஸ்ட் ரிட்டர்ன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிக்கப்

அடுத்து ப்ளிப்கார்ட் தரப்பில் இருந்து பொருளை திருப்பி கொடுப்பதை உறுதி படுத்த கோரி அழைப்பு வரும் அதனை உறுதி படுத்திய பின் ஆர்டர் செய்த முகவரியில் பிக்கப் செய்யப்படும்.

முகவரி

ஒரு வேலை வேறு முகவரியில் இருந்து பிக்கப் செய்யப்பட வேண்டுமானால், உங்களை அழைக்கும் வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் அதனை தெரிவிக்க வேண்டும்.

பொருள்

இனி ப்ளிப்கார்ட் நபர்கள் பொருளை திருப்பி எடுத்து கொண்டு, புதிய பொருளை டெலிவரி செய்வார்கள், இவை அணைத்தும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Return Items Purchased on Flipkart. Here you will come to How to Return Items Purchased on Flipkart.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்