ஸ்மார்ட்போன் வேகத்தை நீட்டிக்க ரீசெட் செய்வது எப்படி??

By Aruna Saravanan
|

திடீரென உங்களது ஸ்மார்ட்போனின் வேகம் குறைந்து விட்டதா. குறிப்பிட்ட செயலிகளை திறக்கவும் அதிக நேரம் எடுத்து கொள்கின்றதா. கவலை வேண்டாம் இது சிறிய பிரச்சனை தான், இதை சரி செய்ய உங்களது போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்தால் போதுமானது.

ஸ்மார்ட்போன் கருவியை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

உங்கள் டிவைஸின் தன்மைக்கு ஏற்ப செட்டிங் ஆப்ஸ்க்கு வெவ்வேறு ஐகான்கள் இருக்கும். ஆப் ட்ரேக்குள் இதை காண முடியலாம். அல்லது போனின் மெனு பட்டனை தள்ளினாலும் இதை பெற முடியும்.

ஃபேக்ட்ரி ரீசெட்

ஃபேக்ட்ரி ரீசெட்

செட்டிங் ஆப்ஷனின் இரண்டில் ஒரு பிரிவில் ஃபேக்ட்ரி ரீசெட் ( Factory data reset ) அம்சம் இருக்கும். இது ஒவ்வொரு டிவைஸ்க்கும் மாறுபட்டிருக்கும். ப்ரைவசி ( Privacy ) செட்டிங்கை தேர்ந்தெடுத்து ஃபேக்ட்ரி ரீசெட் ஆப்ஷனிற்கு ஸ்க்ரோல் செய்யவும்.

ஃபேக்ட்ரி ரீஸ்டோர்

ஃபேக்ட்ரி ரீஸ்டோர்

எல்லா தரவுகளையும் டெலீட் செய்து டிவைஸின் ஃபேக்ட்ரி ரீஸ்டோர் செய்வதற்கு ரீசெட் டிவைஸை க்ளிக் செய்யவும்.

அழித்தல்

அழித்தல்

இரேஸ் எவ்ரிதிங் எனும் எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இந்த செயல்முறையை உறுதிபடுத்தவும். இது எல்லா தரவுகளையும் டெலீட் செய்து உங்கள் டிவைஸின் ஃபேக்ட்ரி செட்டிங்கை ரீஸ்டோர் செய்யும். இப்பொழுது உங்கள் போன் பாக்ஸை விட்டு சற்று முன் வெளியே எடுக்கப்பட்டது போல் இருக்கும்.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

ரீசெட் செயல்பாட்டை தொடங்குவதற்கு முன் உங்கள் கருவியை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். (டிவைஸ் உறைந்து போய் இருந்தால் அணைத்து வைப்பதற்காக பேட்டரியை வெளியே எடுக்கவும்.)

ரிக்கவரி

ரிக்கவரி

ரிக்கவரி பட்டன்கள் ஒவ்வொரு கருவியிலும் மாறுபட்டிருக்கும். ஆகையால் உங்கள் போனுக்கான அறிவுறுத்தலை பார்க்கவும். பட்டன்களை அழுத்தி சில நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பல பொதுவான பட்டன் கலவைகளில் கீழே கொடுப்பவை அடங்கும்:
Volume Up + Home + Power
Volume Down + Power
Home + Power
இதில் எதுவும் உபயோகப்படவில்லை என்றால் உங்கள் போனுக்குகான ரிக்கவரி மோடினை இணையத்தில் தேடி எடுத்து கொள்ளலாம்.

ஃபேக்ட்ரி ரீசெட்

ஃபேக்ட்ரி ரீசெட்

ரிக்கவரி மெனு திறந்தவுடன் வால்யூம் பட்டன் உதவியுடன் செயல்படுத்தவும்.. ஃபேக்ட்ரி ரீசெட் மோடினை பெற ரிவ்வரி மெனுவை திறக்கவும். பவர் பட்டனை பயன்படுத்தவும். சில மாடல்கள் மெனு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க கேமரா பட்டனை பயன்படுத்த வலியுறுத்துகின்றன. ஃபேக்ட்ரி ரீசெட் உறுதிபடுத்துமாறு நீங்கள் கேட்டுகொள்ளப்படுவீர்கள்

ரீஸ்டோர்

ரீஸ்டோர்

உங்கள் போன் ரீசெட் ஆன பின் அது ஃபேக்ட்ரி டீஃபால்ட்க்கு சென்றுவிடும் பின்பு கருவியில் எதுவும் இருக்காது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read Here in Tamil How to Reset Your Android Smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X