ஸ்மார்ட்போன் ஸ்க்ராட்ச் : வருந்த வேண்டாம், சரி செய்யலாம் வாங்க.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனையை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். அது என்ன பிரச்சனை?

தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்றே ஸ்மார்ட்போன் திரையில் ஏற்பட்ட ஸ்க்ராட்ச் அதாவது கீறல்களை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

ஸ்க்ராட்ச் அல்லது கீறல்களை சரி செய்ய முடியுமா, இது உண்மையில் சாத்தியமா என யோசிக்காமல் ஸ்மார்ட்போன் திரையை சரி செய்யும் வழி முறைகளை பாருங்கள்.

குறிப்பு

குறிப்பு

இங்கு குறிப்பிடப்பட இருக்கும் வழிமுறைகளை பின்பற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். இவைகளை முயற்சிக்கும் போது ஏற்படும் எவ்வித தவறுகளுக்கு தமிழ் கிஸ்பாட் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

பற்பசை

பற்பசை

வெள்ளை நிற பற்பசை அதாவது டூத்பேஸ்ட் சிறிதளவு பஞ்சு துணியில் எடுத்து கீறல் ஏற்பட்ட இடங்களில் மென்மையாக உருண்டை வடிவில் துடைக்க வேண்டும். கீறல் முழுமையாக நீங்கும் வரை இதனை பின்பற்றலாம்.

பசை

பசை

கார் கீறல்களை சரி செய்யும் க்ரீம் வகைகளை முயற்சிக்கலாம். இங்கு சிறிதளவு க்ரீமை எடுத்து சுத்தமான பஞ்சு துணியில் வைத்து மெதுவாக துடைக்கலாம். கீறல் நீங்கியவுடன் சுத்தமான துணியை கொண்டு திரையை சுத்தம் செய்ய வேண்டும்.

உப்பு காகிதம்

உப்பு காகிதம்

இது சற்றே ஆபத்தான வழி முறையே, இதை பின்பற்றும் போது கவனம் மற்றும் அனுபவம் அவசியம். இங்கு உப்பு காகிதத்தை குறைந்த வேகத்தில் மென்மையாக துடைக்க வேண்டும். பெரும்பாலும் இந்த வழிமுறையை ஸ்மார்ட்போனின் பின்புறங்களில் ஏற்ப்பட்டிருக்கும் கீறல்களுக்கு பயன்படுத்துவது நல்லது.

ஆப்ப சோடா

ஆப்ப சோடா

இரு பங்கு ஆப்ப சோடா ஒரு பங்கு நீரை நன்றாக கலக்க வேண்டும், பசை பதத்தில் வந்தவுடன் ஆப்ப சோடா பசையை சிறிய பஞ்சு துணியில் வைத்து உருண்டையாக திரையில் வைத்து துடைக்க வேண்டும். கீறல் நீங்கியவுடன் சுத்தமான துணியை கொண்டு திரையை சுத்தம் செய்ய வேண்டும்.

பேபி பவுடர்

பேபி பவுடர்

பேபி பவுடரை நீரில் கறைத்து பசை பதத்தில் இதனை கீறல்களை எடுக்க பயன்படுத்தலாம். முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும் ஆப்ப சோடாவிற்கு பதில் இங்கு பேபி பவுடரை பயன்படுத்தலாம்.

எண்ணெய்

எண்ணெய்

கீறல் ஏற்ப்பட்டவுடன் ஒரு சொட்டு எண்ணையை கீறலில் விட்டு உடனடியாக கீறல்களை சரி செய்ய முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Remove Scratches From Your Phone Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X