ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி.??

By Meganathan
|

ஆன்லைன் வந்த பின் நேரடி கட்டண மையங்களில் மக்கள் கூட்டம் குறைந்திருக்கின்றது என பெரும்பாலானோர் கூறி வந்தாலும், மக்கள் இன்னும் வரிசையில் நிற்கின்றனர் என்பதே உண்மை. இண்டர்நெட் இருக்கும் போது ஏன் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டும். வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் மின் கட்டணங்களை செலுத்துவது எப்படி என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

பதிவு

பதிவு

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

சேவை

சேவை

இணையதளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் புதிய வாடிக்கையாளர் பதிவு (New User Registration) பட்டனை க்ளிக் செய்யவும். இங்கு க்ளிக் செய்தவுடன் புதிய இணைய பக்கம் திறக்கும், அங்கு உங்களது பகுதியை தேர்வு செய்து வாடிக்கையாளர் அடையாள எண் குறிப்பிட வேண்டும். இந்த எண் முந்தைய மாதம் கட்டண ரசீதில் மி.இ.எண் பகுதியில் இருக்கும்.

மின்.இ.எண்

மின்.இ.எண்

அடுத்து ரசீதில் இருக்கும் வாடிக்கையாளர் பதிவு எண் என்டர் செய்யலாம். பதிவு எண் என்டர் செய்த பின் கன்ஃபார்ம் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். க்ளிக் செய்த பின் உங்களது கணக்கு துவங்கப்பட்டதை உறுதி செய்யும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். இந்த மின்னஞ்சலில் இருக்கும் லின்க்'ஐ க்ளிக் செய்து உங்களது யூஸர் ஐடியை உறுதி செய்ய வேண்டும்.

லாக் இன்

லாக் இன்

அடுத்து மீண்டும் லாக் இன் பக்கத்திற்கு சென்று லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்த பின் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை போன்றே இணைய பக்கத்தில் க்ளிக் செய்ய வேண்டும். இப்பகுதியில் க்ளிக் செய்தவுடன் கட்டணம் செலுத்தும் பக்கம் திறக்கும். இப்பக்கத்தில் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, இண்டர்நெட் பேங்கிங் என உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கட்டணம் செலுத்த முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil How to Pay Electricity Bill Online in Tamil Nadu.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X