கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

By Meganathan

விர்ச்சுவல் ரியால்டி எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியப்படைய செய்ததை தொடர்ந்து இதனை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்தும் நேரம் வந்து விட்டது என்று தான் கூற வேண்டும். மேம்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் கணினி உலகை கண் முன் கொண்டு வருவதோடு புதியதொரு அனுபவத்தை வழங்குகின்றது.

'ரூட்' அடிச்சாலும் வாரண்டி இருக்கும் ஜி..!

தற்சமயம் சாம்சங், எச்டிசி, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை இயக்க தங்களது கருவிகளை தயாரித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வெளியானது தான் கூகுள் கார்டு போர்டு. அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் கூகுள் கார்டு போர்டினை வீட்டில் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

'பாகுபலி'யை கரைத்து குடிக்கும் 'புலி'..!

கார்டுபோர்டு

கார்டுபோர்டு

கூகுள் கார்டு போர்டு செய்ய உங்களுக்கு தேவையானது 9*22 இன்ச் அளவில் இருக்கும் அட்டை பெட்டி, பெரும்பாலும் பீட்ஸா அல்லது ஷூ பெட்டி போன்றவைகளை பயன்படுத்தலாம்.

லென்ஸ்

லென்ஸ்

அடுத்து 25 எம்எம் டயாமீட்டர் மற்றும் 40 எம்எம் ஃபோக்கல் லென்த் அளவில் இருக்கும் லென்ஸ் தேவைப்படும்.

காந்தம்

காந்தம்

வட்ட வடிவில் இருக்கும் இரு காந்தம், இரு வெல்க்ரோ ஸ்ட்ரிப்களும் தேவைப்படும். இதோடு ரப்பர் பேன்டு, பசை, கத்தி மற்றும் கத்தரி போன்றவைகளையும் எடுத்து கொள்ளுங்கள்.

கார்டுபோர்டு
 

கார்டுபோர்டு

தேவையானவற்றை எடுத்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பாருங்கள்

ப்ரிண்ட்

ப்ரிண்ட்

முதலில் கார்டுபோர்டு செய்ய தேவையான அச்சினை இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து ப்ரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

ஒட்டுதல்

ஒட்டுதல்

ப்ரிண்ட் அவுட் எடுத்த பேப்பரினை கார்டுபோர்டில் வைத்து ஒட்ட வேண்டும்.

வெட்டுதல்

வெட்டுதல்

தேவையான இடங்களில் படத்தில் இருப்பதை போன்றே கவனமாக வெட்ட வேண்டும்.

லென்ஸ்

லென்ஸ்

வெட்டி முடித்த பின் வளைந்த இடத்தில் லென்ஸ் பொருத்தி இன்னொரு பகுதியில் காந்தத்தினை பொருத்த வேண்டும். பின் பசையை கொண்டு கார்டு போர்டினை ஒட்டி தேவையான இடங்களில் வெல்க்ரோ ஸ்ட்ரிப்களை பொருத்த வேண்டும்.

கார்டு போர்டு

கார்டு போர்டு

மேல் குறிப்பிட்டவைகளை சரியாக பின்பற்றியிருந்தால் கார்டுபோர்டு முக்கால் வாசி தயாராகிவிட்டது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

பின் கார்டு போர்டில் உங்களது ஸ்மார்ட்போனினை வைத்து அதில் ரப்பர் பேன்டு கொண்டு கட்ட வேண்டும், இவ்வாறு செய்தால் உங்களது போன் கீழே விழாது.

 
Read more about:
English summary
Check out here MAKE YOUR OWN GOOGLE CARDBOARD. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X