ஆன்டிராய்டு போன் அழைப்பு மற்றும் குருந்தகவல்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி

Written By:

ஏர்டிராய்டு (Airdroid ) செயளி மூலம் ஆன்டிராய்டு ஸ்கிரீனை கணினியில் கொண்டு வர முடியும் ஆனால் இதற்கு ஆன்டிராய்டு போன் ரூட் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் ஆன்டிராய்டு போன் செயளிகளை கணினியில் பயன்படுத்த முடியும்.

தொலைபேசி எண்களில் இவ்வளவு விஷயம் இருக்கா, இது தெரியாம போச்சே

ஏர்டிராய்டு 3 மூலம் கணினியில் அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, குருந்தகவல்களை அனுப்புவும் பெறவும் முடியும். இங்கு போனை இணையம் மூலம் இயக்க முடியும் என்பதால் கூடுதலாக மென்பொருள் எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஏர்டிராய்டு

ஆன்டிரயாடு போனில் ஏர்டிராய்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம்

ஏர்டிராய்டு செயளியை ஆன்டிராய்டு போனில் திறக்க வேண்டும்.

கணக்கு

செயளியில் புதிய கணக்கை உருவாக்க கூறும், ஆனால் அதற்கு அவசியம் இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சைன் இன் லேட்டர் (Sign in later) என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

எனேபிள்

இப்பொழுது ஏர்டிராய்டு கணினியில் நோட்டிபிகேஷன்களை கான்பிக்க அனுமதி கேட்கும், இங்கு எனேபிள் (Enable) என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஏர்டிராய்டு நோட்டிபிகேஷன்

அடுத்து நோட்டிபிகேஷன்களை இயக்க நீங்கள் சிஸ்டம் செட்டிங்ஸ் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவீர்கள், இங்கு ஏர்டிராய்டு நோட்டிபிகேஷன் மிரர் சர்வீஸ் (AirDroid Notification Mirror service) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

உறுதி

உறுதிபடுத்தும் தகவல் தெரியும் அங்கு ஓகே (OK) என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இணையதளம்

அடுத்து பேக் பட்டனை க்ளிக் செய்து ஏர்டிராய்டு பகுதிக்கு செல்ல வேண்டும், அங்கு இந்த URL - http://web.airdroid.com தெரியும்

கியு ஆர் கோடு

அந்த URL உங்கள் கணினியில் திறக்க வேண்டும், அங்கு QR கோடு ஒன்று தெரியும்.

கேமரா

ஆன்டிராய்டு போனின் ஏர்டிராய்டு பகுதியில் QR கோடை க்ளிக் செய்ய வேண்டும், இது கேமராவை திறக்கும்.

ப்ரவுஸர்

கேமராவை QR கோடில் காண்பிக்க வேண்டும், அடுத்து ஆன்டிராய்டு செயளி ஸ்கேன் செய்து முடித்த பின் வைப்ரேட் ஆகும்.
இதையடுத்து அனைத்து ஆன்டிராய்டு நோட்டிபிகேஷன்களும் இந்த ப்ரவுஸரில் தெரியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Make Calls and SMS From Computer Using Android Phone. Here you will come to know How to Make Calls and SMS From Computer Using Android Phone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்