நெட் பேக் கட்டணங்களை எப்படியெல்லாம் சேமிக்கலாம்..!?

Written by: Aruna Saravanan

இன்று மொபைலில் பேலன்ஸ் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் நெட் பேக் இல்லாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நெட் பேக் கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இங்கு நெட் பேக் பயன்படுத்தும் கட்டணங்களை எப்படி எல்லாம் சேமிக்க முடியும் என்பதை பார்ப்போமா.?

நெட் திட்டங்கள் பல வகைகளில் நம்மை கவர்ந்தாலும் நாம் அவற்றை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இதன் மூலம் அதிக அளவில் பணத்தை சேமிக்க முடியும். அவ்வழிகளை இங்கு காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Wi-Fi பயன் படுத்தவும் :

உங்கள் மொபைல் நெட் பயன்பாட்டை குறைக்க WiFi பயன்பாடு உதவியாக இருக்கும். நெட் திட்டத்தை செயல்படுத்துவதை விட இந்த முறையால் உங்களுக்கு லாபம் தான். எப்படி இருந்தாலும் உங்கள் போனில் நெட் பயன்பாடு நன்றாக கிடைக்க வேண்டுமெனில் நெட் கனக்ஷன் நன்றாக இருப்பது அவசியம்.

தள்ளுபடி :

தள்ளுபடி திட்டத்தை நீங்கள் கேட்க முடியும். விசேஷ நாட்களில் நெட் திட்டத்தில் பல வித தள்ளுபடி கொடுக்க பலர் முன்வருவார்கள். அதை நீங்கள் எடுத்து கொண்டால் உங்களுக்கு லாபம் தான். அதிலும் வியரிட் கனக்ஷன் எடுத்து கொண்டால் கூடுதல் லாபம் தான்.

மதிப்பீடு :

உங்கள் நெட் பயன்பாட்டை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்தனை இமெயில்கள் அனுப்புகின்றீர்கள், பாடல்கள் டவுன்லோட் செய்கின்றீர்கள், படம் பார்க்கின்றீர்கள் என்பதை பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம். நீங்கள் பார்த்த வெப்சைட்ஸ் வெப் பக்கங்கள் போன்றவற்றை பற்றியும் அறிந்து இருத்தல் வேண்டும். இதன் மூலம் உங்கள் தரவுகளின் திட்டத்தை தெளிவாக எடுக்க முடியும்.

விரைவில் செயல்படவும் :

எந்த திட்டதை செயல் படுத்த வேண்டும் என்பதில் விரைவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். நெட் திட்டங்கள் அதுவும் வேகமாக செயல் படும் நெட் திட்டங்கள் மார்கெட்டில் வரும் போது விரைவாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நல்ல நெட் திட்டம் வருவதை அறிந்து அறிவுபூர்வமாக செயல் பட வேண்டும்.

பயன்பாட்டை பார்வையிடவும் :

நிங்கள் நெட்டை அதிக அளவு பயன்படுத்துகின்றீர்களா என்பதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். தேவையில்லாமல் அதிக அளவில் பயன்படுத்தினால் அதை நிறுத்தி விடுவது நன்றது.

முன்கட்டணம் :

நெட் பயன்பாட்டில் முன் கட்டணம் செலுத்தி பயன்படுத்துவது என்பது சிறந்த சேவையாகும். நீங்கள் 1GB திட்டம் எடுத்தால் நீங்கள் எந்த திட்டம் எடுத்து உள்ளீர்கள் என்பதில் தெளிவாக இருக்கலாம். இதனால் உங்கள் பயன்பாட்டை உங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும்.

குடும்ப திட்டம் :

உங்கள் குடும்ப நபர்கள் ஒரே டெலிகாம் ஆப்ரேட்டர் வைத்திருந்தால் இந்த திட்டம் கண்டிப்பாக உதவியாக இருக்கும். இதனால் உங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இதன் மூலம் தரவுகளை அதிக அளவில் சேமிக்க முடியும்.

ஒரு டெலிகாம் கேரியர் கீழ் :

இதன் மூலமும் உங்களால் சேமிக்க முடியும். உங்கள் கால் கட்டணம் மற்றும் டேட்டா கட்டணம் இதில் அடங்கும். உங்கள் குடும்ப நபர்கள் ஒரே டெலிகாம் கேரியரை பயன்படுத்தினால் உங்கள் மொபைல் கட்டணத்தை அதிக அளவு சேமிக்க முடியும்.

பண்டில் :

இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டமாகும். இதில் எண்ணற்ற சேவைகளை பெற முடியும். கால்கள், தரவுகள், எஸ்எம்எஸ் என பலவகைகளுக்கு சிறந்த திட்டமாகும்.

எஸ்எம்எஸ் தவிர்க்கவும் :

இலவச மெசேஜர் ஆப்களின் மூலம் பணத்தை சேமிக்க முடியும். எஸ் எம் எஸ் அதிக அளவில் பணம் இழுப்பதால் இந்த ஆப்கள் உங்கள் பணத்தை சேமிக்க உதவும்.

மேலும் படிக்க :

கூகுள் க்ரோம் ப்ரவுஸர் : தெரிந்துகொள்ள வேண்டிய தந்திரங்கள்..!


ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!


ஆப்பிள் செய்யாததை சாம்சங் செய்யும்.!!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
How to Lower Your Cell Phone Internet Bill. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்