சாத்தியம் : மொபைல் தொலைந்தாலும் தரவுகளை அழிக்கலாம்.!!

Written by: Aruna Saravanan

அடிக்கடி மொபைல் போன் கருவிகளை தொலைப்பவர்களுக்கு இந்த தொகுப்பு சமர்பனம். மொபைல் போன் தொலைந்து போனால் யாராக இருந்தாலும் வருத்தம் இருக்க தான் செய்யும். ஆனால் என்ன செய்வது. என்ன செய்தாலும் போன கருவியை மீட்பது சற்றே சவாலான விஷயம் தான். ஆனால் கவலை கொண்ட பின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் மொபைல் போன் காணாமல் போனால் அது எங்கு இருக்கின்றது என்பதையும், அதில் உள்ள வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் போன்றவற்றை டெலீட் செய்ய பல வழி முறைகள் இருக்கின்றது. உங்கள் ஆண்ட்ராய்டு போன் இண்டர்நெட் தொடர்பில் உள்ள வரை உங்களால் அதன் தரவுகளை கண்டிப்பாக மற்ற இடத்தில் இருந்து டெலீட் செய்ய முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிவைஸ் மேனேஜர்

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை தூரத்தில் இருந்து டெலீட் செய்ய வேண்டுமா. அதற்கு நீங்கள் உங்கள் போன் காணாமல் போவதற்கு முன்பு ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை செயல் படுத்த வேண்டும். அதற்கு Google Settings >> Security >> Android Device Manager சென்று 'allow remote lock and erase' என்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.

டிவைஸ்

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் ஆப் அல்லது ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் இணையதளம் சென்று உங்கள் மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியும். அதில் லாக் இன் செய்த உடன் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் காணாமல் போன போனை தேடும் பணியில் ஈடு படும். உங்கள் ஸ்மார்ட்போன் ஆனில் இருந்தால் உங்கள் டிவைஸில் உள்ள மேப்பில் இருக்கும் இடத்தினை காண முடியும்.

ரிங் செய்தல்

டிவைஸ் இருக்கும் இடத்தை கண்டறிந்தவுடன் Ring, Lock and Erase என இரண்டு ஆப்ஷன்களை பார்ப்பீர்கள். அதை வைத்து உங்கள் ஸ்மார்ட் போனை தூரத்தில் இருந்தே ரிங் செய்ய முடியும். 5 நிமிடத்திற்கு உங்கள் போன் முழு சத்ததில் அடிக்கும்.

லாக் திரை

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் உள்ள லாக் ஆப்ஷனை தேர்வு செய்து தூரத்தில் இருந்தே உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்ய முடியும்.

அழித்தல்

இரேஸ் ( Erase ) ஆப்ஷனை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை அழிக்க முடியும். இது கிட்டத்தட்ட முழுமையான ஃபேக்ட்ரி ரீசெட் செய்வதை போன்றது தான். இது எல்லா செட்டிங்கையும், பாடல், போட்டோக்கள் மற்றும் ஆப்ஸ்களையும் டெலீட் செய்யும். ஆனால் SD கார்டை டெலீட் செய்வது கடினம்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
How To Locate And Erase Data On Lost Android Smartphone. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்