வை-பை ரவுட்டர் மூலம் இண்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி.?

By Meganathan
|

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இண்டர்நெட் மூலமாகவே இணைக்கப்பட்டுள்ளனர். எங்கும் இண்டர்நெட் எதற்கும் வை-பை என சுழன்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென வீட்டு வை-பை சரியாக வேலை செய்யாமல் போகும்.

சும்மாவே இக்காலத்து இளசுகளின் ரத்தம் சூடாகும், இதில் வை-பை வேகம் குறைந்தால் சொல்லவே வேண்டாம், அவங்க அப்படியே டென்ஷனாகிடுவாங்க.. இந்த மாதிரியான நேரங்களில் அதிக சூடாகாமல் வை-பை வேகத்தை எப்படி அதிகரிப்பது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

ரீபூட் ஷெட்யூல்

ரீபூட் ஷெட்யூல்

பெரும்பாலும் புதிய ரவுட்டர்களை ரீபூட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, எனினும் இண்டர்நெட் வேகம் குறையும் போது ரீபூட் செய்வது நல்ல பலன்களை தரும்.

சேனல் விட்த்

சேனல் விட்த்

பொதுவாக ரவுட்டர்களில் 20MHz மற்றும் 40MHz என இரு விட்த் செட்டிங்ஸ் இருக்கும், வேகம் குறையும் போது இவைகளை மாற்றியமைத்தால் ஸ்ட்ரீமிங் அல்லது தகவல்களை பறிமாற்றம் செய்யும் வேகம் அதிகரிக்கும்.

அப்டேட்

அப்டேட்

மற்ற மின்சாதன கருவிகளை போன்றே ரவுட்டர்களையும் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும்.

இடம்

இடம்

வை-பை ரவுட்டர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை மாற்றியமைக்கும் போது சில இடங்களில் வேகம் அதிகமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

சேனல்

சேனல்

வை-பை சேனல்களை மாற்றுவது சில முறை வேலை செய்யும், இதை செய்ய அக்ரிலிக் வை-பை மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பேன்டு

பேன்டு

வீட்டின் பெரும்பாலான கருவிகளில் இண்டர்நெட் பயன்படுத்துபவர் என்றால் கூடுதலாக பேன்டு ரவுட்டரை பயன்படுத்தலாம். இதன் மூலம் அனைத்து கருவிகளுக்கும் சீரான வேகம் கிடைக்கும்.

ரவுட்டர்

ரவுட்டர்

ரவுட்டர் செட் செய்யும் போதே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் தான் அதை பாதுகாக்க உதவும் கடவு சொல், எப்பவும் இந்த கடவு சொல் எனும் பாஸ்வேர்டினை கடினமாகவும் யாரும் யூகிக்க முடியாத படி வைக்க வேண்டும்.

ஆன்டெனா

ஆன்டெனா

புதிதாக ரவுட்டர் வாங்குவதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் ரவுட்டரின் ஆன்டெனாவை மாற்றலாம், இதன் மூலம் இண்டர்நெட் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது.

ப்ரோடோகால்

ப்ரோடோகால்

வை-பை ரவுட்டர்களின் ப்ரோடோகால்களை மாற்றியமைக்க வேண்டும், இதை மேற்கொள்ள ரவுட்டரின் லாக் இன் செய்து 802.11 மோடிற்கு மாற்ற வேண்டும், இதன் மூலம் புதிய ப்ரோடோகால்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஃபர்ம்வேர்

ஃபர்ம்வேர்

புதிதாக ஃபர்ம்வேர்களை இன்ஸ்சால் செய்து பார்க்கலாம். DDWRT மற்றும் OpenWRT ஆகிய இரண்டும் பிரபலமான ஃபர்ம்வேர்களாக இருக்கின்றன.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some simple and easy steps To Improve The Speed of Your Current Router. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X