மொபைல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியும்.!!

Written By:

தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள் இலவசமாக வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் படி சிறப்பு முகாம்கள் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மாற்று அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பெறுவது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இலவசம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள் சிறப்பு முகாம்களில் கட்டணமின்றி வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

மாவட்டம்

அதன்படி சென்னை, கடலூர், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்களில் வழங்கப்படும்.

எஸ்எம்எஸ்

மேற்கண்ட மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள் 94441 23456 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி மாற்று வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம். அதன்படி, மொபைல்போன் மூலம் < EPIC > < SPACE > < EPIC NO > என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். விவரங்கள் சரியாக இருக்கும் வாக்காளர்கள் < yes > என்று பதில் எஸ்எம்எஸ் 94441 23456 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

விவரம்

ஒரு வேளை விவரங்கள் சரியில்லை என்றால் வாக்காளர் < no > என்று பதில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அல்லது 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கலாம்.

இணையதளம்

மேலும், வாக்காளர்கள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் இருந்து (http://www.elections.tn.gov.in) படிவம் 001 யை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தபின் மாற்று வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
How to get New Voter Id for free via SMS
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்