ஆன்லைனில் பாஸ்போர்ட் பதிவு செய்வது எப்படி

Posted by:

அரசு சார்ந்த பல சேவைகள் ஆன்லைனில் கிடைக்க துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகின்றது. இண்டர்நெட் மூலம் அரசு ஆவனங்களை பூர்த்தி செய்வது மிகவும் எளிமையான நடைமுறையாகிவிட்டது.

அந்த வகையில் ஆன்லை் மூலம் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இணையத்தில் பாஸ்போர்ட் பெற செய்ய வேண்டியவைகளை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இணையதளம்

முதலில் பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

ரெஜிஸ்டர்

பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்தும் முன் அதில் உங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ள  வேண்டும்.

லாக் இன்

ரெஜிஸ்டர் செய்த பின் மீண்டும் பாஸ்போர்ட் சேவா தளத்திற்கு சென்று லாக் இன் செய்ய வேண்டும்.

அப்ளை

லாக் இன் செய்ததும் "Apply for Fresh Passport/Re-issue of Passport" க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்தவுடன் புதிய பக்கத்தில் விண்ணப்ப படிவம் காணப்படும்.

விண்ணப்பம்

இங்கு காணப்படும் விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த பின் சமர்பிக்கலாம்.

பணம்

விண்ணப்ப படிவத்தை சமர்பித்த பின் "Pay and Schedule Appointment" க்ளிக் செய்ய வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்றவைகளை பயன்படுத்தலாம். பணம் செலுத்திய பின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேதியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ப்ரின்ட்

பணம் செலுத்தி முடித்த பின் "Print Application Receipt" க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை ப்ரின்ட் செய்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட்

விண்ணப்பத்தை ப்ரின்ட் செய்த பின் தேர்வு செய்த தேதியில் வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு செல்லும் போது அனைத்து படிவங்களின் ஒரிஜினல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Here you will come to know How to Apply for Passport Online. This is interesting, useful and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்