பழைய ஐபோன், புதிய 3டி டச், நீங்களே செய்யலாம்..!?

By Meganathan
|

புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகள் உலகம் முழுக்க பரபரப்பாக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் புதிய கருவிகளில் முக்கிய அம்சமாக கருதப்படும் 3டி டச் பழைய ஐபோன்களிலும் பயன்படுத்த முடியும் என இணையத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

வழக்கமாக ஆப்பிள் கருவிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு புதிய ஐபோன் கருவிகளுக்கும் அதிகமாகவே இருந்தது.

புதிய அம்சம்

புதிய அம்சம்

வழக்கமாக புதிதாக வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் முந்தைய கருவிகளில் இல்லாத பல புதிய அசம்ங்கள் வழங்கப்படும்.

3டி டச்

3டி டச்

அதன் படி புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளில் வழங்கப்பட்ட அம்சம் தான் 3டி டச்.

ஆப்ஷன்

ஆப்ஷன்

ஐபோன் திரையில் இருக்கும் ஐகான்களை விரல் அழுத்தத்திற்கு ஏற்ப ஆப்ஷன்களை வழங்கும் திறன் 3டி டச் அம்சம் வழங்கும். இந்த அம்சம் முந்தைய ஐபோன் கருவியில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயன்பாடு

பயன்பாடு

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3டி டச் அம்சம் பழைய ஐபோன்களில் ஐஓஎஸ்9 இயங்குதளம் கொண்ட கருவிகளில் பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

ஜெயில் ப்ரேக்

ஜெயில் ப்ரேக்

3டி டச் அம்சத்தினை ஐஓஎஸ் 9 கொண்ட ஐபோன்களில் பயன்படுத்த கருவியை ஜெயில் ப்ரேக் செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் குறிப்பிட்ட கருவி ஆப்பிள் நிறுவனத்தின் வாரண்டியில் பொருந்தாது. இதனால் கருவியில் பிரச்சனை ஏற்பட்டால் ஆப்பிள் நிறுவனம் பொறுப்பேற்காது.

சிடியா

சிடியா

கருவியை ஜெயில் ப்ரேக் செய்த பின் சிடியா ஆப் ஸ்டோரினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஃபோர்ஸி

ஃபோர்ஸி

பின் சிடியா ஆப் ஸ்டோரில் இருந்து ஃபோர்ஸி எனும் இலவச செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

3டி டச்

3டி டச்

ஃபோர்ஸி செயலியை இன்ஸ்டால் செய்த பின் ஐபோனில் 3டி டச் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to add 3D Touch features to your old iPhone. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X