ஆண்ட்ராய்டில் ஃபேஸ்புக் : எளிய தந்திரங்கள்.!!

Written by: Aruna Saravanan

நீங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஸ்மார்ட்போன் மூலம் அடிக்கடி ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றீர்களா. அப்படியானால் நீங்கள் பல தந்திரங்களை கற்று கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் செயலிக்கான ஃபேஸ்புக் தந்திரங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அக்கவுண்ட் பாதுகாப்பு

சிலர் எல்லா கருவிகளிலும் முகநூல் பயன்படுத்தும் பழக்கும் வைத்திருப்பார்கள். அது தவறு இல்லை. ஆனால் அவற்றை சைன் அவுட் செய்யாமல் விட்டுவிடுவதுதான் தவறு. இப்படி விடுவதால் சில கருவிகளிலில் உங்கள் அக்கவுண்ட் மூடப்படாமல் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

சேமித்தல்

உங்களுக்கு பல நண்பர்கள் முகநூலில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் பலவித லிங்க்ஸ் மற்றும் வீடியோக்களை அனுப்பலாம். ஆனால் அவை அனைத்தையும் உங்களால் உடனே படிக்க முடியாமல் இருக்கலாம். அதற்கு லிங் அல்லது வீடியோ போஸ்டுக்கு மேலே வலது பக்கத்தில் உள்ள அம்பு குறியை கிலிக் செய்து ‘Save Video/Link' என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் அவற்றை பிறகு படிக்க என சேமித்து கொள்ள முடியும்.

வேண்டாத நண்பரின் போஸ்ட்டை நீக்க

சில நண்பர்கள் தொல்லைக்கு பேர் போனவர்கள். அவர்கள் அனுப்பும் போஸ்ட்கள் உங்களுக்கு எரிச்சல் அளிக்கக்கூடும். அவர்களை முகநூலில் இருந்து நீக்க முடியும் என்றாலும் நேரடியாக அதை செய்ய வேண்டாம் என்று எண்ணினால் உங்களுக்கு ஒரு ஆப்ஷன் உண்டு. அவர்களின் போஸ்டை நீங்கள் தொடராமல் இருக்கலாம். அவை உங்கள் டைம்லைனில் தோன்றாமல் இருக்க தொடர்ந்து வரும் டேபை கிலிக் செய்து unfollow என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

முதலில் பார்க்க

தேவையில்லாத போஸ்டை unfollow செய்தது போல தேவையான நண்பரின் போஸ்டை பிடித்த இடத்தில் வைக்க ஆசையா. அவர்கள் உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ யாராக இருந்தால் அவர்களை முதன்மை இடத்தில் வைக்க நீங்கள் விருப்பம் கொள்ளலாம். முதலில் அவர்களின் போஸ்டை பார்வையிட ஆசை கொள்ளலாம். அதற்கு உங்கள் டைம்லைனில் தொடர்ந்து வரும் டேப் சென்று See First option என்பதை தேர்வு செய்யவும்.

ஷார்ட்லிஸ்ட்

சில நண்பர்களிடம் தான் நாம் அடிக்கடி பேசுவோம். அவர்கள் அலுவலக நண்பர்களாக இருக்கலாம் அல்லது தொலை தூரத்தில் இருப்பவர்களாக இருக்கலாம் அவர்களிடம் அடிக்கடி தொடர்பில் இருப்போம். அவர்களை ஷார்ட்லிஸ்ட் செய்ய எடிட் ஆப்ஷன் சென்று ஆண்ட்ராய்ட் ஆப்பில் சேட் பார் செல்லவும். அங்கிருந்து நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால் நீங்கள் அடிக்கடி அவர்களை தேடி scroll செய்ய தேவையில்லை. அவர்களின் பட்டியல் விரைவில் கிடைத்து விடும்.

விட்ஜெட்

ஆண்ட்ராய்ட் மூலம் மெசேஜ் அனுப்ப ஸ்மார்ட்போன் ஹோம் திரையின் விட்ஜெட் பயன்படுத்தலாம். இதன் மூலம் முகநூல் தொடர்பு ஈஸியாக நடைபெறும். இதில் உள்ள சுழலக்கூடிய விண்டோ உங்கள் நண்பர்களின் தற்போதைய தகவலை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும். மேலே வலது பக்கத்தில் உள்ள ஷேர் பொத்தானை பயன்படுத்தி விட்ஜெட் மூலம் பகிர முடியும். இதற்கு ஆப்பை பவர் அப் செய்ய வேண்டும் என்று இல்லை.

இடத்தை கண்டுபிடிக்கலாம்

தற்பொழுது முகநூலில் கூகுள் மேப் உதவியோடு ஆண்ட்ராய்ட் ஆப்பை கொண்டு புகழ்பெற்ற இடங்களை கண்டு பிடிக்கலாம். இதன் மூலம் அவற்றின் சிறப்பு அம்சங்கள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள இடங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள உணவு விடுதி, போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

பேட்டரி

ஆண்ட்ராய்ட் செயலிக்கான முகநூலில் அதிக அளவுக்கு பேட்டரியை சேமிக்க முடியும். இதற்கு பதில் நீங்கள் வெப் ஆப்பை பயன்படுத்தலாம். அதற்கு, முகநூல் மொபைல் சைட்டை க்ரோம் பிரவுஸரின் உதவியோடு பெற வேண்டும் (http://Facebook.com) ஸ்மார்ட்போனில் ஷேர் பொத்தானை க்ளிக் செய்து ஹோம் திரைக்கு இணைக்கவும். இது முடிந்தவுடன் FB லோகோ ஸ்மார்ட்போனில் கிடைக்கும். அது வெப்சைட் விண்ணப்பத்தின் வடிவில் கிடைக்கும். இதில் நீங்கள் அதிக அளவுக்கு தரவுகளை எதிர் பார்க்க தேவையில்லை.

மெசன்ஜர்

முகநூல் மற்றும் மெசன்ஜர் ஆப்பில் இருந்து நீங்கிய உடன் உங்களுக்கு இருக்கும் ஒரே பயம் chat heads பற்றிய பாதுகாப்பு. இதற்கு மெசேன்ஜர் செயலியின் செட்டிங் டேப் சென்று chat heads ஆப்ஷனை அன்செலெக்ட் செய்யவும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியையும் சேமிக்க முடியும்.

மற்ற ஆப்

ஆண்ட்ராய்ட் மூலம் உள்ள மிக சிறந்த பயன்பாடு மற்ற ஆப்பில் இருந்து நீங்கள் நேரடியாக பகிர முடியும். எடுத்துக்காட்டாக உங்கள் க்ரோம் பிரவுஸரில் நீங்கள் ஒரு கட்டுரையை படிக்கின்றீர்கள் என்றால் அதை முகநூலில் உங்கள் நண்பர்களுடன் பகிர வேண்டும் என்று ஆசையா. அத்ற்கு ஷேர் பொத்தானை தட்டி பகிரலாம். இதற்கு முகநூல் உங்களுக்கு உதவி புரிகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook App Tips and Tricks for Power Users Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்