குறைந்த வெளிச்சம், சிறந்த புகைப்படம் எடுப்பது எப்படி.??

Written by: Aruna Saravanan

ஸ்மார்ட்போன்களில் வரும் கேமரா அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. யாருக்கு தான் போட்டோ எடுக்க பிடிக்காது. அதுவும் ஸ்மார்ட்போன்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் துள்ளியமானதாக இருக்கும். விஷயத்திற்கு வருவோம். குறைந்த வெளிச்சம் இரவு நேரத்தில் மட்டும் வருவதில்லை சில இடங்களில் பகல் பொழுதில் கூட வெளிச்சம் குறைவாக இருக்கக்கூடும்.

இப்படி குறைவான வெளிச்சம் உள்ள இடங்களில் பிரகாசமான மற்றும் துள்ளியமான புகைப்படங்களை எடுப்பது என்பது ஒரு தனி கலைதான். சில கேமராக்கள் இதை சரியாக செய்கின்றன. ஆனால் நாம் அதை பயன்படுத்த தெரியாமல் மோசமான படங்களை எடுத்து விடுகின்றோம். எப்படி ஸ்மார்ட்போன்களின் கேமராவை கொண்டு வெளிச்சம் குறைவான இடத்தில் நல்ல புகைப்படங்களை எடுப்பது என்று இங்கு பார்ப்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முழு கவனம்

இது எல்லாருக்கும் தெரிந்தது தான். அதாவது முதலில் நீங்கள் படம் எடுக்க போகும் காட்சியை சுற்றி பல காட்சிகள் இருந்தாலும் நீங்கள் எதை அதிகமாக ஃபோகஸ் (focus) செய்கின்றீர்களோ அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். இதனால் எதை போட்டோ எடுக்க வேண்டுமோ அது துள்ளியமாக ஃபோகஸ் செய்யப்படும்.

2. செட்டிங்

குறைந்த வெளிச்சத்தில் தரமான புகைப்படத்தை எடுக்க முதலில் கேமராவின் செட்டிங்கை கைகளால் சரி செய்யவும். தற்பொழுது வரும் பல ஆண்ட்ராய்டு போன்களின் மென்பொருள் மேனுவல் மோட்களை வழங்குகின்றன. அதாவது ஐஎஸ்ஓ (ISO), ஷட்டர் வேகம் (Shutter speed) போன்று பல அம்சங்கள் வந்துள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

3. ஷட்டர் வேகம்

குறைந்த வெளிச்சத்தில் துல்லியமாக புகைப்படம் எடுக்க ஷட்டரின் வேகத்தை குறைத்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு கூறுகளை பார்க்க வேண்டும். ஒன்று ஷட்டரின் வேகம் மற்றொன்று ஐஎஸ்ஓ. எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை ஷட்டரின் வேகமே நிர்ணயம் செய்கின்றது. அதாவது எவ்வளவு நேரம் ஷட்டர் திறந்து வைக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு துள்ளியமாகவும் பிரகாசமாகவும் புகைப்படம் எடுக்க முடியும். நீங்கள் அதிக நேரம் ஷட்டரை திறந்து வைத்திருந்தாலும் அதிகமாக அசைவதால் மங்களான படம் வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மிதமான வெளிச்சத்தில் பிரகாசமாக படம் எடுக்க ஷட்டரின் வேகம் குறைவாக இருக்க வேண்டும் அதோடு மற்ற கூறுகளையும் சரி செய்தல் அவசியம்.

4. ஸ்லோ ஷட்டர்

எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் உங்கள் போனின் ஷட்டர் திறந்து இருக்கட்டும். ஷட்டரின் வேகம் கம்மியாக இருந்தால் எடுக்கும் புகைப்படம் துள்ளியமாக இருக்கும். போட்டோவிற்கு மோஷன் ப்ளர் எஃபெக்ட் (motion blur effect) கொடுக்க விரும்பினால் ஷட்டரை இன்னும் சற்று நேரம் திறந்து வைத்திருக்கலாம். லைட் ட்ரையல்ஸ் (Light trials) உறுவாக்குவதற்கும் நீங்கள் ஷட்டரின் வேகத்தை செட் செய்து கொள்ள முடியும்.

5. ISO செட்டிங்

கையால் செட் செய்யப்படும் ஐஎஸ்ஓ கேமராவின் வெளிச்சத்தை சரி செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓ கம்மியாக இருப்பது புகைப்படம் எடுப்பதற்கான போதிய வெளிச்சம் இல்லாமை என்பதையும் அதுவே அதிகமாக இருந்தால் புகைப்படத்தை அதிக பிரகாசமாக காட்டவும் உதவுகின்றது. எடுத்துக்காட்டாக வெளிச்சம் குறைவாக இருக்கும் பொழுது ஐஎஸ்ஓவை 100இல் வைக்கும் பொழுது பிரகாசமான புகைப்படத்தை எடுக்காது, அதுவே ஐஎஸ்ஓவை 800 அல்லது 1600இல் வைக்கும் பொழுது தேவையான கூடுதல் வெளிச்சத்தை கேமராவே எடுத்து கொள்ளும். ஆனால் ஐஎஸ்ஓ அதிகமாக இருப்பதும் போட்டோ எடுக்க உகந்தது இல்லை.

6. நிலையான இடம்

உங்கள் போனில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (optical image stabilization) மோட் இருக்கக் கூடும். இருந்தாலும் போட்டோ எடுக்கும் போது நிலையான மேற்பரப்பில் போனை வைத்து படம் எடுத்தல் அவசியம். அதுவும் அதிக தூரத்தில் இருக்கும் காட்சியை படம் எடுக்கும்பொழுது போனை நிலையான இடத்தில் வைத்து எடுக்கவில்லையென்றால் காட்சி ஆடி தெளிவாக படம் விழாது. அதிக ஷட்டர் வேகத்துடன் அல்லது குறைந்த ஐஎஸ்ஓ செட்டிங் கொண்டு போட்டோ எடுக்கும் போது போன் வைக்க நிலையான மேற்பரப்பு அவசியம். அல்லது அதற்கென இருக்கும் ட்ரைபாட் (முக்காலி போன்ற ஸ்டாண்டு) பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

7. வைட் பேலன்ஸ் (white Balance)

உங்கள் தோலின் நிறத்தை வித்தியாசமாக காட்டுவதில் வைட் பேலன்ஸ் கில்லாடி. பலதரப்பட்ட வெளிச்சங்களை கையாலும் போது உங்கள் போனில் உள்ள சென்சாரும், மென்பொருளும் குழப்பம் அடையக் கூடும். அதுவும் முக்கியமாக குறைந்த வெளிச்சத்தில். ஆகையால் படம் நன்றாக எடுக்கும் வரை வைட் பேலன்ஸ் செட்டிங்கை சரி செய்து கொள்வது அவசியம்.

8. சுற்றுபுற வெளிச்சம்

குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கும் போது நீங்கள் எடுக்க போகும் காட்சியை சுற்றியுள்ள வெளிச்சத்தை முடிந்தவரை பயன்படுத்தி கொள்வது நல்லது. இதனால் காட்சி தத்ரூபமாக கிடைக்கும். அதிகமான வெளிச்சமும் அழகிய புகைப்படத்தை கொடுப்பதில்லை. இதை முயற்சி செய்து பார்க்க எடுக்க வேண்டிய காட்சியின் மீது அதிகமாக லைட் வைத்து பாருங்கள் போட்டோ மோசமாக வரும்.

9. ப்ளாஷ்

போட்டோ எடுக்க ப்ளாஷ் பயன்படுத்தினால் அதிகமாக வெளிச்சம் விழும். நல்ல புகைப்படம் எடுக்க இவ்வளவு வெளிச்சம் தேவையே இல்லை. குறந்த அளவிலான வெளிச்சமே போதுமானது. முக்கியமாக வரைபடைங்களை எடுக்கும் பொழுது குறைந்த அளவிலான வெளிச்சம்தான் தேவை. ஆகையால் ப்ளாஷ்க்கு நோ சொல்லி அழகான புகைப்படங்களை எடுங்கள்.

10. சூம் (Zoom)

குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது சூம் செய்ய வேண்டாம். நீங்கள் எடுக்க போகும் காட்சியை சூம் செய்து குறைந்த வெளிச்சத்தில் எடுத்தால் புகைப்படம் தெளிவாக கிடைக்காது. ஸ்மார்ட்போன்களில் வரும் டிஜிட்டல் சூம் கூட குறைந்த வெளிச்சத்தில் மோசமான புகைப்படத்தை கொடுக்கும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Read here in Tamil some Easy Tips and Tricks for Low Light Smartphone Photography.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்