விண்டோஸ் 10 பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி??

Written By:

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 இயங்குதளம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களையே சந்தித்திருந்தது அனைவரும் அறிந்ததே. முதல் ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளம் இன்று பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கணினியில் நன்றாக இயங்கி வருகின்றது என்றாலும் இதில் சில கோளாறுகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு விண்டோஸ் 10 இயங்குதளத்தில் காணப்படும் சில பிரச்சனைகளும் அவைகளை எவ்வாறு சரி செய்வது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆக்டிவேஷன்

விண்டோஸ் 10 பதிவிறக்கம் செய்த பெரும்பாலானோர் சந்திக்கும் விஷயம் தான் ஆக்டிவேஷன் எரர், ஆனால் இதை உங்களால் சரி செய்யவே முடியாது. ஆனால் கவலை வேண்டாம், இந்த பிரச்சனை தானாக சரி செய்யப்பட்டு விடும்.

கனெக்டிவிட்டி

பெரும்பாலான விண்டோஸ் 10 பயனர்களின் பிரச்சனை வை-பை திடீரென துண்டிக்கப்பட்டு விடுகின்றது தான். இதை சரி செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்வதை தவிற வேறு வழியே கிடையாது.

டச்பேடு

விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்ததில் இருந்து டச்பேடு சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோர் முன்வைக்கின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்ய டிரைவர்களை ரீஇன்ஸ்டால் செய்யலாம்.

க்ரோம்

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கூகுள் க்ரோம் சில சமயங்களில் கோளாறு செய்வதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதற்கு கூகுள் தரப்பில் இருந்து ஏதேனும் செய்யப்பட வேண்டும். இருந்தும் இது போன்ற சமயத்தில் க்ரோம் ப்ரவுசரை ரீஇன்ஸ்டால் செய்யலாம்.

எட்ஜ்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பரவுஸரை விட மைக்ரோசாப்ட் எட்ஜ் நன்றாகவே இருக்கின்றது எனலாம். இதில் ஃபேவரைட்ஸ் பகுதியை இயக்க செட்டிங்ஸ் சென்று Import favorites from another browser ஆப்ஷனினை க்ளிக் செய்து Import ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஃபோல்டர் ஃபெயில்

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருக்கும் மின்னஞ்சலில் தனி ஃபோல்டர்களை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகின்றது. தற்சமயம் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Read here in Tamil common problems with Windows 10 and how to fix them.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்