ஆன்டிராய்டு லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்...

Posted by:

ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் நெக்சஸ் 9 பெற்றுள்ளது. நீங்க உங்க ஆன்டிராய்டை லாலிபாப்க்கு அப்டேட் செய்தாச்சா, இல்லை இனிமேல் தான் செய்ய போறீங்களா, அப்ப இந்த 10 தந்திரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

லாலிபாப் ஓஎஸ் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு என அனைத்தும் பார்க்க புதுமையாக உள்ளது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களை பாருங்க..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

உங்க போனில் இருக்கும் லாலிபாப் படத்தை தொடர்ந்து அழுத்தினால் சிறிய ஆன்டிராய்டு கேம் லோட் ஆகும்

2

ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் அதிகமாக அதன் செட்டிங்ஸ் மெனுவும் மாறி கொண்டே வருகின்றது, தேடலுக்கு புகழ் பெற்ற கூகுள் நிறுவனம் லாலிபாப் செட்டிங்ஸ் மெனுவை எளிதாக்கியுள்ளது.

3

லாலிபாப் ஓஎஸ் இல் நோட்டிபிகேஷன் பார் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முரை ஸ்வைப் செய்தால் நோட்டிபிகேஷன்களை பெறலாம்

4

லாக் ஸ்கிரீனின் மத்தியில் நோட்டிபிகேஷன்கள் தெரியும், உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் - சவுன்டு நோட்டிபிகேஷன் சென்று சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன்களை தேர்வு செய்ய முடியும்.

5

மற்ற ஆன்டிராய்டுகளை போன்று இல்லாமல் லாலிபாப் ஓஎஸ் உங்களுக்கு நோட்டிபிகேஷன் பாரில் ப்ளாஷ்லைட் வசதி கொடுத்துள்ளது.

6

நீங்க உங்க போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியிருக்கீங்கனு நோட்டிபிகேஷன் பாரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

7

ஆன்டிராய்டில் கெஸ்ட்மோட் ஏற்கனவே இருக்கின்றது ஆனால் இதை செயல்படுத்த நேரம் ஆகும் அதனால் லாலிபாப்பில் நீங்க ஸ்கிரீன் பின்னிங் செய்ய முடியும், இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்

8

புதுசா ஆன்டிராய்டு லாலிபாப் பயன்படுத்தினால் டேப் அன்டு கோ ஆப்ஷன் ஏற்கனவே இருக்கும் கூகுள் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆன்டிராய்டு 4.1 ஸ்மார்ட்போனுடன் என்எப்சி மூலம் இணைக்க முடியும் அதன் பின் உங்க டேட்டாக்களை ப்ளூடூத் மூலம் அனுப்ப முடியும்.

9

இது கூகுளின் டூ நாட் டிஸ்டர்ப் மோட், இதை செயல்படுத்த வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் பட்டன்களை பயன்டுத்தலாம்.

10

பவர் பட்டன் இல்லாமல் ஸ்கிரீனை இரு முறை தட்டினால் அது ஸ்விட்ச் ஆன் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Android Lollipop tips, tricks and hidden features. Here you will find the list of top 10 Android Lollipop tips, tricks and hidden features.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்