
அந்த வகையில் இப்போது மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸில் மீண்டும் ஒரு புதிய விளையாட்டை களமிறக்க இருக்கிறது. ஹலோ 4 என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான விளையாட்டை களமிறக்குவதன் மூலம் எக்ஸ்பாக்ஸின் விற்பனையும் அமோகமாக இருக்கும். அதோடு எக்ஸ்பாக்ஸின் ரசிகர்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக பெருகும் என்று மைக்ரோசாப்ட் கணக்குப் போடுகிறது.
இந்த ஹலோ 4 விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். ஹலோ விளையாட்டின் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கவே மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸில் இந்த ஹலோ 4 விளையாட்டை களமிறக்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் எக்ஸ்பாக்ஸ் ரசிகர்களும் மற்றும் ஹலோ 4 ரசிகர்களும் கண்டிப்பாக ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்பது முற்றிலும் உண்மை.
ஹலோ 4 விளையாட்டுடன் வரும் புதிய எக்ஸ்பாக்ஸ் வரும் நவம்பர் மாதத்தி்ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.20,000மாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் விளையாட்டு பிரியர்களை திருப்திபடுத்தும் என நம்பலாம்.






























