Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

புதிய சோட்டாபீம் வீடியோ கேம் அறிமுகம்!

Updated: Saturday, July 28, 2012, 12:52 [IST]

chhota bheem mice mayhem

இந்தியாவில் ஒளிபரப்பாகும் போகோ டிவோ சேனல் இந்திய குழந்தைகளை அடிமைப்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இந்த போகோ சேனலை பார்த்து மகிழ்கிறார்கள்.

தற்போது இந்த போகோ சேனல், ஜம்ப் கேம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்களோடு கூட்டணி வைத்து ஒரு மொபைல் கேமை களம் இறக்கி இருக்கிறது. இந்த கேமிற்கு சோட்டா பீம்: மைஸ் மேகம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த மொபைல் விளையாட்டின் கதாநாயகனாக வரும் சிறுவன் பீம், ஒரு சூப்பர் ஹூயூமன் பையனுக்கான அனைத்து திறமைகளையும் பெற்றிருப்பான். அதே நேரத்தில் துடுக்குத் தனமாகவும், தைரியமாகவும், நேர்மையாகவும் இருப்பான். இவனுடைய இப்படிப்பட்ட அசாத்திய பண்புகளால் தனது நண்பர்களையும் மற்றும் தனது கிராமத்து மக்களையும் துன்பங்களிலிருந்து காப்பான்.

இந்த பீம் பையன் ஒரு லட்டு கடையை நடத்தி வருகிறான். அவன் கடையில் ஏராளமான லட்டுகள் இருக்கின்றன. இந்த பீமுக்கு காலியா என்ற ஒரு எதிரி இருக்கிறான். அவன் பீமின் லட்டு கடையை நிர்மூலமாக்க ஒரு குரும்புக்கார எலியை லட்டுக் கடையில் விட்டுவிடுகிறான். இந்த எலி எவ்வாறு பீமின் லட்டுகளை காலி பண்ண முயற்சி செய்கிறது. அதை தடுப்பதில் எவ்வாறு பீம் வெற்றி பெறுகிறான் என்பதே இந்த கேமின் சாராம்சம்.

இந்த கேம் இந்தியாவில் பெறும் வெற்றியைப் பெறும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த கேமில் 12 லெவல்கள் உள்ளன. இதை விளையாடும் போது உண்மையாகவே ஒரு திரில் இருக்கும் என்பது உண்மை.

இந்த கேமை ஜாவா மற்றும் ப்ளாக்பெரி மற்றும் மற்ற மொபைல்களிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். வோடோபோன், ஐடியா, டாட்டா டோக்கோமோ மற்றும் ரிலையன்ஸ் ஆகியவற்றின் அப்ளிகேசன் ஸ்டோர்களில் இருந்து ரூ.50 செலுத்தி இந்த விளையாட்டை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Story first published:  Saturday, July 28, 2012, 12:52 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll