ஜீப்ரானிக்ஸ் :ரூ.4,242/-க்கு மல்டிமீடியா ஸ்பீக்கர் அறிமுகம்.!

இது ப்ளூடூத் மற்றும் டூவல் டிரைவர் சப்வூஃபருடன் 2.2 சேனல் ஸ்பீக்கர் என்பது குறிப்பிடத்தக்கது

|

ஆடியோ மற்றும் வீடியோ பொருட்கள் தயாரிப்பில் விரைவாக வளர்ந்து வரும் பிராண்டான ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆடியோ பிரிவில் மற்றுமொரு புதிய பொருளை இணைத்துள்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், டவர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் என்று நுகர்வோரிடம் இருந்து புதிய ஆடியோ சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், ஜீப்ரானிக்ஸ் ஒவ்வொரு மாதமும் ஒரு சில புதிய பொருட்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

ஜீப்ரானிக்ஸ் :ரூ.4,242/-க்கு மல்டிமீடியா ஸ்பீக்கர் அறிமுகம்.!

தற்போதைய அறிமுகம் இந்த 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கர் ஆகும். ZEB-BT361RUCF என்று அழைக்கப்படும் இந்த 2.2 ஸ்பீக்கர் நிச்சயமாக அனைவரின் கண்களையும் கவர்வதாகவும், தங்களது வீடுகளில் இருந்து துள்ளலான இசையை கேட்கும் அல்லது திரைப்படத்தைப் பார்க்கும் இசைப்பிரியர்களின் மனதைக் கவர்வதாகவும் அமையும். இதன் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு வழங்கப்பட்டுள்ள மரப்பெட்டி அமைப்பு - இசைப்பிரியர்கள் பொதுவாக எதிர்பார்க்கும் உறுதியையும் நேர்த்தியான தோற்றத்தையும் இதற்கு வழங்கும்.

ஜீப்ரானிக்ஸ் :ரூ.4,242/-க்கு மல்டிமீடியா ஸ்பீக்கர் அறிமுகம்.!

ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் நமது அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸின் இயக்குநர் திரு. பிரதீப் தோஷி தெரிவித்தார். ஜீப்ரானிக்ஸின் புதிய ஸ்பீக்கர் ப்ளூடூத் இணைப்பு பெறும் வசதி, USB போர்ட், SD சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனருடன் வருகிறது. சப்வூஃப்பரின் ஒலி வெளிப்பாட்டு சக்தி 25W ஆகும், அதேவேளை இதன் ஒவ்வொரு துணை ஸ்பீக்கர்கள் 12W வெளிப்பாட்டினை வழங்குகின்றன; இது சரியான அளவு பேஸ் மற்றும் உயர்ந்த ட்ரிப்பில் இசையின் சிறந்த கலவையை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

LED காட்சித்திரையுடன் அழகாக பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பலகம் இதன் மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவி செய்கிறது. ஒலியளவு, பேஸ் மற்றும் ட்ரிப்பில் ஆகியவை பணிச்சூழலியல் முறைப்படி சப்வூஃபருக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2.2 ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் மூலம் அனைத்தையும் தூரத்தில் இருந்தே இயக்க முடியும். ஜீப்ரானிக்ஸ் 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கர் ஆன்லைனிலும் நாடு முழுதும் உள்ள நிறுவனத்தின் விநியோக கூட்டமைப்பின் மூலமாகவும் விற்பனை செய்யப்படும். இதற்கு ரூ.4242 என்று எளிதாக வாங்கக்கூடிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Zebronics launched ZEB-BT361RUCF 2.2 Multimedia Speaker. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X