எமெர்ஜென்சி நேரத்தில் இவைகள் கையில் இருந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம்..!

Written By:

எமெர்ஜென்சி நேரம் - எப்போது நிகழும் என்ன நிகழும் என்று சொல்லவும் முடியாது, நிகழும் பொது அசாதாரணமாக செயல்படவில்லை என்றால் அதில் இருந்து தப்பித்து கொள்ளவும் முடியாது. அப்படியான எமெர்ஜென்சி நேரங்களில், ஒரு குண்டூசி கூட மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்பது தான் நிதர்சனம் அதாவது குறைந்த நுட்பத்திறனுடனான

கேஜெட்டுகள் கூட அவசர நேரத்தில் மிகவும் திறனுடன் செயல்பட உதவும். அப்படியாக, எமெர்ஜென்சி நேரத்தில் இவைகள் கையில் இருந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம் போன்ற சில கேஜெட்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அவசர கால கருவி #1 :

போர்டபில் யுஎஸ்பி பேட்டரி - ஒரு நல்ல உயர் திறன் கொண்ட சிறிய அளவிலான உள்ள யுஎஸ்பி பேட்டரியானது உங்கள் மொபைலை நீண்ட நாள் வரை பிழைத்திருக்க வைக்கும்..!

அவசர கால கருவி #2 :

சோலார் பேட்டரி சார்ஜர் - மின்சார வசதி இல்லாத இடங்களில் சிக்கி கொள்ளும் போது, இந்த சூரிய சக்தி மூலம் சக்தியூட்டப்படும் பேட்டரி சார்ஜர் நிச்சயம் ஒரு வரம் தான் !

அவசர கால கருவி #3 :

பேக்-அப் போன் - ஸ்மார்ட்போனுக்கு தான் அதிகப்படியான பேட்டரி தேவைப்படும். ஆனால் பீச்சர் போன்கள் அப்படியில்லை ஆகையால் பேக்-அப் ஆக ஒரு பீச்சர் போன் கைவசம் வைத்துக்கொள்வது எப்போதுமே நல்லது..!

அவசர கால கருவி #4 :

வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் - பொதுவாக பல ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே ஹாட் ஸ்பாட் ஆப்ஷன் நடைமுறையில் இருக்கிறது இருப்பினும் குழுவாக இருப்பவர்களுக்கு வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் பரிந்துரைக்கப்படுகிறது..!

அவசர கால கருவி #5 :

எல்இடி லைட் மற்றும் லாண்டர்ன் - சக்தி செயலிழப்பு ஏற்பட்டு இருளில் மூழ்கி கிடக்கும் நேரத்தில் கைவசம் ஒரு எல்இடி லைட் அல்லது லாண்டர்ன் இருப்பது நல்லது..!

அவசர கால கருவி #6 :

எமெர்ஜென்சி ரேடியோ - மோசமான மழை வெள்ளம் அல்லது ஒரு புயல் மத்தியில் இருக்கிறீர்கள் உங்களுக்கு உதவி என்கிறபோது ஒரு எமெர்ஜென்சி ரேடியோ கைவசம் இருப்பின் நீங்கள் உயிர்பிழைக்கப்படலாம்..!

அவசர கால கருவி #7 :

அல்கலைன் பேட்டரிகள் - எந்தவொரு நிலையிலும் உங்கள் ஸ்மார்ட் சாதனங்கள் எப்போதும் இயக்கத்தில் இருக்க தரமான ரீசார்ஜபில் பேட்டரிகள் கைவசம் இருப்பது அவசியம்.!

அவசர கால கருவி #8 :

ஜெனரேட்டர் - எல்லா நேரத்திலும் இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டில் அத்தியாவசிய உயிர்நாடி பணியாற்ற வேண்டும் என்ற நிலையில் ஜெனரேட்டர் நிச்சயம் தேவை..!

அவசர கால கருவி #9 :

மல்டி-டூல் - இது ஒரு தொழிநுட்ப கருவி இல்லை என்கிற போதிலும் சில அத்தியாவசிய எமெர்ஜென்சி கேஜெட்களை சீர் செய்ய மல்டி-டூல் மிக அவசியம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படங்கள் : அமேசான்

Read more about:
English summary
These are the tech gadgets you’ll want to have in an emergency. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்