2016-ல் கூகுள் நிறுவனத்தின் "பெஸ்ட்" எது.? இதோ பட்டியல்.!

2016-ஆம் ஆண்டில் கூகுளின் சிறந்த அறிமுகங்கள்.!

By Siva
|

அமெரிக்காவின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான கூகுள் நிறுவனம், இந்த ஆண்டில் மிகச்சிறந்த டெக்னாலஜி அறிமுகங்களை செய்து இன்றும் உலக அளவில் தாங்கள் தான் முன்னணி நிறுவனம் என்பதை மெய்ப்பித்து வருகிறது.

விவோ வி5 ப்ளஸ் : செல்பீ கேமிரா புரட்சியின் ஆரம்பம்.!

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன், கூகுள் ஹோக், டேட்ரீம் VR, கூகுள் ஸ்டேசன் உள்பட இந்நிறுவனம் அறிமுகம் செய்த பல டெக்னாலஜி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு கூகுள் அறிமுகப்படுத்தியவை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள்:

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள்:

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை கடும் போட்டியாக உள்ள நிலையில் இந்த துறையில் கூகுள் குதித்ததே ஒரு ஆச்சரியமான விஷயம். 2016ஆம் ஆண்டு வெளியான பிக்சல் மற்றும் பிக்சல் XL மாடல் ஸ்மார்ட்போன்கள் தரமான கேமிரா, ஆடியோ வீடியோ தரம், தரம் வாயந்த பிராஸசர் என வாடிக்கையாளர்களை அசத்தி இதன் போட்டியாளர்களின் தூக்கத்தை கெடுத்தது

கூகுள் அலோ:

கூகுள் அலோ:

2016ஆம் ஆண்டில் கூகுள் அறிமுகம் செய்த செயலியின் பெயர்தான் கூகுள் அலோ. வாய்ஸ் மெசேஜ் உள்பட பல விஷயங்களை எளிதில் அனுப்ப இந்த செயலி மிகவும் உபயோகமாக இருந்ததால் உலகில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தினர். ஒரு பெர்சனல் அசிஸ்டெண்ட் போல மெசேஜ் அனுப்ப, கால் செய்ய, டிக்கெட்டுக்கள் புக் செய்ய இந்த ஆப் மிகவும் உபயோகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் ஜிபோர்டு:

கூகுள் ஜிபோர்டு:

மெதுவாக டைப் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒரு செயலி என்றால் அது கூகுள் ஜிபோர்டு தான். இதன் மூலம் எளிமையாக டெக்ஸ்ட்களை டைப் செய்வது, வாய்ஸ் டைப்பிங், மற்றும் கூகுள் சியர்ச் உள்பட பல சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளர்கள் அனுபவித்தனர். மேலும் இதன் மூலம் நமக்கு தேவையான இமோஜிக்களையும் எளிதில் பெறலாம். மேலும் விரல் வலிக்க டைப் செய்து கொண்டிருந்த காலம் போய், வாய்ஸ் மூலம் டைப் செய்யும் ஆப்சன் டெக்னாலஜியின் அடுத்த கட்டம் என்பதில் சந்தேகம் இல்லை

கூகுள் டேட்ரீம் VR:

கூகுள் டேட்ரீம் VR:

பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் VR ஹெட்செட்டுக்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை தயாரித்து வந்த போதிலும் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த டேட்ரீம் VR டெக்னாலஜியின் அடுத்த லெவல் ஆக இருந்தது. அதிகபட்ச தரத்துடன் உருவாக்கப்பட்டிருந்த கூகுள் டேட்ரீம் VR ஹெட்செட்டுக்கள் வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றது.

யூடியூப் கோ:

யூடியூப் கோ:

2016ஆம் ஆண்டில் அனைவரையும் மிகப்பெரிய அளவில் பேச வைத்த ஒரு விஷயம் யூடியூப் கோ. இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் மெதுவான இண்டர்நெட் கனெக்சனை பயன்படுத்தி வரும் நிலையில் யூடியூப் கோ அறிமுகம் ஆன பின்னர்தான் மெதுவான இண்டர்நெட் கனெக்சனிலும் யூடியூப் வீடியோக்களை இந்த செயலி மூலம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பார்த்தும், டவுன்லோடு செய்தும் வந்தனர்,

கூகுள் ஸ்டேஷன்ஸ்:

கூகுள் ஸ்டேஷன்ஸ்:

இந்திய ரயில்வே நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் உள்ள 400 ரயில்வே நிலையங்களில் வைபை சேவையை கூகுள் நிறுவனம் தொடங்கியது. இதற்கு பெயர்தான் கூகுள் ஸ்டேஷன். மேலும் தற்போது 100 ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் ஹை ஸ்பீடு தரம் உள்ள வைபையை தந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் வைபை:

கூகுள் வைபை:

கூகுள் நிறுவனத்தின் வைபை ரூட்டர் இந்தியர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த டிவைஸ் மூலம் ஹைஸ்பீடு இண்டர்நெட்டை சாமானியர்களும் பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

கூகுள் டியோ:

கூகுள் டியோ:

ஸ்கைப் உள்பட பல வீடியோ சாட் செயலிகள் இருந்தாலும் இந்தியர்கள் எந்த வித பிரச்சனையும் இன்றி பயன்படுத்தும் அளவுக்கு 2016ஆம் ஆண்டில் அறிமுகம் ஆன வீடியோ சேட் செயலிதான் கூகுள் டியோ. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த செயலி மூலம் இந்தியர்கள் ஸ்மார்ட்போனில் முகம் பார்த்து பேசி மகிழ்ந்தனர்.

கூகுள் ஹோம்:

கூகுள் ஹோம்:

ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருந்த கூகுள் நெள மற்றும் ஆப்பிள் ஐபோனி சிறி செயலிகள் போலவே நாம் வாய்ஸ் மூலம் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு செயலியாக இருந்தது கூகுள் ஹோம். டெக்னாலஜி உலகில் இந்த கூகுள் ஹோம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது போலவே இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Best Mobiles in India

English summary
Here are the best products Google launched in 2016. Check it out now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X