பெரிய ஸ்கீரின் ஸ்மார்ட்போன்கள்-சரியான தேர்வா?

பெரிய ஸ்க்ரீன் உடைய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது எளிதா-அத்தைகைய போன்களை தேர்ந்தெடுப்பது சரியா.?

Written By:

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளை பொறுத்து நாம் தவிர்க்கவியலாத நம் உடலின் ஓர் பகுதியாகவே ஆகிவிட்டது ஸ்மார்ட் போன்களின் உதவியின்றி நாம் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவே இயலாது எனும் நிலைமையும் உள்ளது அத்தகைய ஸ்மார்ட்போன்கள் துவக்கத்தில் சிறிய டிஸ்பிலே அளவினைக்கொண்டே வெளிவந்தது (3.5-4இன்ச்) இப்போது பெரிய திரைகளைக்கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படுகின்றன(4.7-5.2இன்ச்) இந்நிலையில் பெரிய ஸ்க்ரீன்களைக்கொண்ட ஸ்மார்ட்போன்கள் சரியான தேர்வா எனக்காண்போம்.

கடந்த எல்லா வருடங்களிலும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது நிறுவன தயாரிப்பு போன்களின் ஸ்கீரின் அளவினை பெரிதுபடுத்தியே தயாரித்து வருகின்றனவாடிக்கையாளர்களாலும் இது பெரிதும் விரும்பப்படுகிறது அதே நேரத்தில் ஆப்பிள் போன்ற பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளில் ஸ்க்ரீன் அளவினை அதிகரித்து வருகிறது. இத்தகைய பெரிய ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களைப்பற்றிய சில தகவல்கள் கீழே..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அதிக தகவல்களை காண:

பெரிய ஸ்கீரினைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் திரை வழியே ஒரேநேரத்தில் நாம் அதிக சமூக வலைத்தளச் செய்திகள் உள்ளிட்ட அதிக தகவல்களைக்காண இயலும் இது ஓர் சிறப்பம்சம் ஆகும் அதேபோன்று புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வழியே நாம் மிகத்தெளிவாகவும் துல்லியமாகவும் காண இயலும்.ஆண்ட்ராய்டு வகைபோன்களில் நாம் மினிமைஸ் செய்வதின் வழியே இரு வேறு தளங்களையும் ஆஃப்களையும் ஒரே நேரத்தில் உபயோகிக்க இயலும்.

இதன் மூலம் நாம் பெறுவது:

பெரிய ஸ்க்ரீனைகொண்ட ஸ்மார்ட்போன் திரையின் மூலம் நாம் குறைந்த நேரத்தில் நமக்கு தேவையானவற்றை மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் விசாலமான பேட்டரிகளை இத்தகைய போன்கள் கொண்டிருப்பதால்
அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய அவசியம் இருப்பதில்லை.

உபயோகிக்க வசதியாக:

பெரிய ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அவசரமான நேரங்களில் உபயோகிக்க கடினமானதாக இருக்கும் நமது பாக்கெட் அளவினை விட பெரியதாக இருக்கும் எனவே ஆண்ட்ராய்ட்டு மற்றும் ஐஓஎஸ் ன் புதிய தயாரிப்புகள்
எளிதில் உபயோகிக்ககூடியதாகவும் ஒரு கையால் மெசேஜ்களை டைப் செய்யக்கூடியதாகவும் அமையும்.

அதிக பவரினை எடுத்துக்கொள்ளும்:

பெரிய ஸ்க்ரீன்களைக்கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஸ்க்ரீனுக்காக அதிக சார்ஜினை எடுத்துக்கொள்ளும் இதில் பெரிய பேட்டரிகளைக்கொண்ட ஸ்மார்ட்போன்களும் அடங்கும் ஸ்க்ரீன்களின் வகைக்கேற்ப இது மாறுபடும் டிஎப்டி,ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன்களுடன் ஒப்பிடுகையில் அமோல்ட்டு ஸ்க்ரீன்கள் குறைவான பவரினையே எடுத்துக்கொள்ளும்.

ஏற்ற அளவினை தேர்ந்தெடுத்தல்:

ஸ்மார்ட்போன்கள் சிறியதும் பெரியதுமாக ஸ்க்ரீன்களைக் கொண்டு பல அளவுகளில் கடைகளில் கிடைக்கின்றன அவற்றில் நமது கை அளவினுக்கு ஏற்ற போன்களை தேர்ந்தெடுத்து வாங்குவதன் மூலம் தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பதோடு உபயோகிக்க சிறந்ததாகவும் இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Large screen smartphones is it the right size
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்