2016-ன் "டக்கரு டக்கர்" வடிவமைப்புகள், இதோ.!

ஒவ்வொரு ஆண்டும் டெக்னாலஜி நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய தயாரிப்புகளில் ஒருசில கேட்ஜெட்டுக்களை மாற்றி புதிய மாடல் போன்று வெளியிட்டு லாபம் பார்த்து வருகின்றன.

Written By:

ஒவ்வொரு ஆண்டும் டெக்னாலஜி நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய தயாரிப்புகளில் ஒருசில கேட்ஜெட்டுக்களை மாற்றி புதிய மாடல் போன்று வெளியிட்டு லாபம் பார்த்து வருகின்றன.

சந்தையில் புதிய மாடல் வெளிவந்துள்ளதாக பலர் நினைத்து அதை வாங்க முன்வருவார்கள். மிகவும் டெக்னாலஜி அறிவுடன் பார்த்தால் அன்றி அதில் உள்ள மாற்றம் நம்முடைய கண்ணுக்கு தெரியாது.

பிளிப்கார்ட் எக்ஸ்சேன்ஞ்சில் ரூ.9,990/-க்கு ஆப்பிள் ஐபோன் 6.!

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகிய மாடல்களிலும் கடந்த 21016ஆம் ஆண்டு இவ்விதமான மாற்றங்கள் நடந்துள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், லெனோவா, சியாமி, ஆப்பிள், எல்.

மலிவு விலையில் டூவல் ரியர் கேமிரா, நீண்ட பேட்டரி கொண்ட ஹானர் 6எக்ஸ்.!

ஜி உள்பட பல நிறுவனங்கள் இந்த கேட்ஜெட் மாற்றத்தை செய்துள்ளன. அவ்வாறு மிகச்சிறிய அளவில் கேட்ஜெட் மாற்றப்பட்டு சந்தைக்கு மீண்டும் விற்பனை ஆன ஒருசில பொருட்கள் குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டச் கீபோர்டு உடன் வந்த லெனோவா யோகா புத்தகம்

பொதுவாக டேப்ளட் தயாரிப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. அதற்கு வாடிக்கையாளர்களிடம் மதிப்பு குறைந்துவிட்டதே இதற்கு காரணம். டேப்ளட்டிற்கு பதிலாக பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை தயாரிக்க முன்வந்துள்ளன.

இந்நிலையில் லெனோவா கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள உபகரணம் யோகா புக். நல்ல கவர்ச்சியான டிசைனில் வெளிவந்துள்ள இந்த கீபோர்டு நான்கு விதங்களில் செயல்படுகிறது. டைப் மோட், கிரியேட் மோட், வாட்ச் மோட் மற்றும் பிரெளஸ் மோட். இந்த கீ போர்டின் சிறப்பு அம்சம் இது 360 டிகிரியில் வேலை செய்யும் என்பதுதான்

இந்த லெனோவா கீபோர்டு, ஹாலோ கீபோர்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த கீபோர்டு லெனோவா டேப்ளட்டிற்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. டேப்ளட்டில் டைப் செய்வதற்கு கடினமாக இருப்பதாக பலரிடம் இருந்து வந்த புகார் காரணமாக இந்த கீபோர்டை லெனோவா வெளியிட்டுள்ளத். இதனால் லெனோவா டேப்ளட் பயனாளிகள் திருப்தி அடைந்துள்ளனர்.

பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் வந்துள்ள சியாமி மி மிக்ஸ்:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ஸ்மார்ட்போன் சியாமி மி மிக்ஸ் பெஸல் லெஸ் உடன் வெளிவந்து அனைத்து தரப்பினர்களையும் அதிசயிக்க வைத்தது. சியாமி நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள விளிம்பை சரி செய்து உருவாக்கப்பட்டது தான் இந்த பெஸல் லெஸ் டிஸ்ப்ளே சியாமி மி மிகஸ்

ஸ்க்ரீனில் இருந்து பாடி வரை ஏற்கனவே 75% இருக்கும் நிலையை மாற்றி இந்த மாடலில் 91.3% ஆக மாற்றப்பட்டதே இதன் சிறப்பு அம்சம். மேலும் அபாரமான சவுண்ட் சிஸ்டம், லுக்கான டிசைன் இதன் மற்ற சிறப்புகள் ஆகும்

 

டச் பார் உடன் வெளிவந்துள்ள ஆப்பிள் மேக்புக்

சமீபத்தில் வெளியான ஆப்பிள் மேக் புக் பயனாளிகளுக்கு திருப்தியை அளித்தாலும் அதில் ஃபங்க்சன் கீ இல்லாதது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தையை சமாளிக்க ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு உபகரணம்தான் டச் பார். டச் பார் உடன் ஆப்பிள் மேக் புக்கை பயன்படுத்தினால் பயனாளிகளின் அதிருப்தி முற்றிலும் நீங்கி விடுகிறது.

இந்த டச் பார் எமோஜிகளை டிஸ்ப்ளே செய்வதும், டெக்ஸ்ட்களை நமக்கு தேர்வு செய்தும் கொடுப்பதால் பயனாளிகள் இதை எளிமையாக கையாலாம். மேலும் இதில் அதிக அளவிலான ஷார்ட்கட் அமைந்திருப்பதால் அனைவரும் உபயோகிக்கும் வகையில் உள்ளது.

 

மாடுலர் டிசைனுடன் கூடிய எல்.ஜி G5 மற்றும் மொட்டோ இசட்

கூகுள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் மாடுலர் டிசைன்களை தற்போது கைவிட்டுவிட்டது. ஆனால் அதற்காக மாடுலர் டிசைன்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டது என்பது அர்த்தம் இல்லை. எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி G5 மாடலில் ஓப்பன் செய்யும் மாடுலர் டிசைனை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள பல மாடல்களில் கூடுதல் இணைப்பாக மாடுலர் டிசைன் இணைக்கப்பட்டுள்ளது என்பதே இதன் ரகசியம். மற்றபடி அனைத்து எல்ஜி போன்களில் உள்ள டிசைன், பேட்டரி, கேமிரா மற்றும் ஸ்பீகர்கள் இதிலும் உள்ளது.

லெனோவா நிறுவனத்தின் இதே வழியை பின்பற்றி மோட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள மாடல்தான் மோட்டோ Z மாடல் ஸ்மார்ட்போன். இந்த மாடலும் மற்ற மோட்டோ நிறுவனத்தின் தன்மையுடன் மாடுலர் டிசைனில் வெளிவந்துள்ளது.

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Innovative design changes were seen in gadgets such as Lenovo Yoga Book, Xiaomi Mi Mix, Lenovo's Moto Z, LG G5, Apple MacBook Pro, and more.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்