ஓ.. இப்படித்தான் ஆவிகள் கேமராவில் சிக்குதா.?

பேய்கள் கேமிராவில் மட்டும் சிக்குவது ஏன்.? என்ன காரணம்.?

|

நேற்று இரவு ஒரு பயங்கரமான யோசனையின் போது ஒரு கிறுக்குத்தனமான கேள்வி மனதிற்குள் எழுந்தது - "ஆமாம். அது ஏன் ஆவிகள், பேய்கள் எல்லாமே கேமராவில் மட்டுமே சிக்குகின்றன.??" என்பது தான் அந்த கேள்வி. யோசிக்க யோசிக்க நாய்கள் ஊளையிட அச்சம் தொற்றுக்கொள்ள தொடங்கியது. பின்னர் சரி இப்போது வேண்டாம் காலையில் எழுந்ததுமே இதற்கு விடைத்தேடி கண்டுபிடிச்சுடனும் என்ற ஆர்வத்தில் கிளம்பிய கட்டுரைதான் இது.!

என்னைப்போன்றே நீங்களும் ஒரு சரியான "பேய் பயந்தாங்கோலி" என்றால் இந்த தொகுப்பு நிச்சயமாக உங்களை சற்று தைரியப்படுத்தலாம். அனாலாக் ப்லிம் கேமிரா காலத்தில் இருந்து தற்போதைய ஸ்மார்ட்போன் கேமிரா வரையிலாக "பேய்கள், ஏன் கேமிராவில் மட்டும் சிக்குகின்றன..?" என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

ஆர்ப்ஸ் :

ஆர்ப்ஸ் :

அவைகளில், ஆர்ப்ஸ் (Orbs) எனப்படும் கேமிரா தொழில்நுட்ப கோளாறு மிக முக்கியமான ஒரு காரணமாகும். ஒரு புகைப்படம் எடுக்கும் போது, ஒரு உருண்டை வடிவில் பிரதிபலிக்கும் உருவத்தை தான் ஆர்ப்ஸ் என்பர். இது ஃப்ளாஷ் பயன்படுத்துவதில் மூலம் தூசி அல்லது மற்ற துகள்களின் மேல் விழும் அதீத வெளிச்சத்தினால் உருவாகுகிறது. இதை சிலர் ஆவி, பூதம் என்று கதைக்கட்டி விடுவர்.

மெதுவான இயக்கம் :

மெதுவான இயக்கம் :

டிஜிட்டல் கேமிராக்கள் தொடங்கி ஸ்மார்ட்போன் கேமிராக்கள் வரை அனைத்துமே மெதுவான இயக்கம் என்றவொரு பொதுவான தொழில்நுட்ப கோளாறை அவ்வப்போது சந்திக்கும். முக்கியமாக இருட்டான இடங்களில் இது அதிகம் நிகழும். இந்த கோளாறின் கீழ் பதியும் புகைப்படத்தில் ஆவி பேய் போன்ற உருவங்கள் தெரிவதும் சாத்தியமே.!

சிதைவு

சிதைவு

அதாவது இதனை இமேஜ் அலியசிங் (image aliasing) என்பர் அதாவது புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்யும் கேமிரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் மிகவும் முக்கியமான கோளாறுகள் ஆகும்.

அமானுஷ்யத்தை பிரதிபலிக்கும்

அமானுஷ்யத்தை பிரதிபலிக்கும்

இருப்பினும் கருப்பு வெள்ளை புகைப்பட காலத்தில் இருந்தே சில அமானுஷ்ய புகைப்படங்களுக்கு, எந்தவொரு கேமிரா தொழில்நுட்ப கோளாறு விளக்கமோ, அறிவியல் விளக்கமோ கிடைக்க பெறவில்லை என்பதும், அந்த புகைப்படங்கள் இன்றுவரை அமானுஷ்யத்தை பிரதிபலிக்கும் சாட்சியங்களாய் இருக்கின்றன என்பதும் தான் நிதர்சனம்..!

சம்பவங்கள்

சம்பவங்கள்

19-ஆம் நூற்றாண்டில் இருந்தே ஆவிகள், புகை உருவங்கள், விளக்கமில்லாத பொருள்கள் புகைப்படங்களில் பதிவாகும் சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன. 1850 மற்றும் 1860-களில் புகைப்படகலைஞர்கள் கேமிரா தொழில்நுட்பத்தில் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டனர் எடுத்துக்காட்டுக்கு ஸ்டீரியோஸ்கோபிக் படங்கள் ( stereoscopic images), இரட்டை வெளிப்பாடு எனப்படும் டபுள் எக்ஸ்போஷார் (double exposure) போன்றவைகள்.

ஆழம் பற்றிய மாயை

ஆழம் பற்றிய மாயை

ஸ்டீரியோஸ்கோபி (ஸ்டீரியோஸ்கோபிக்ஸ்) ஒரு படத்தில் ஆழம் பற்றிய மாயையை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு நுட்பமாகும். இதை நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் சிக்குவது வழக்கம்.

டபுள் எக்ஸ்போஷார்

டபுள் எக்ஸ்போஷார்

ஒரு புகைப்பட ஊடகத்தின் மீது இரண்டு சூப்பர்இம்போஸ்டு படங்களை பதிவு செய்யும் செயல் அல்லது செயல்பாடுதான் டபுள் எக்ஸ்போஷர் எனப்படும். வழக்கமாக ஒரு சிறப்பு விளைவை உருவாக்க வேண்டுமென்றே செய்யப்படும் இந்த நுட்பத்தில் ஆவிகள் மற்றும் பேய்களையும் கூட உருவாக்கலாம்

போலி

போலி

கருப்பு வெள்ளை புகைப்பட காலம் தொடங்கி அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்ட இந்த காலம் வரை பலர் பணத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும் பொய்யான பேய் புகைப்படங்ககளை உருவாக்குவதும், பின் அது போலி என்று நிரூபிக்கப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Folks Its just a Camera error Not ghosts. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X