அடித்து நொறுக்கும் தொழில்நுட்பம், ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அதிசயம்.!!

Written By:

2016 ஆம் ஆண்டு துவங்கி ஒரு வாரம் நிறைவடைய இருக்கும் சூழ்நிலையில் உலக மக்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது சர்வதேச நுகர்வோர் மின்னணுவியல் நிகழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய படைப்புகள் அறிமுகம் செய்ப்படும்.

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் கண்காட்சியில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களது கருவிகளை வெளியிட்டு வருகின்றன. இங்கு இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டதில் அனைவரும் கவனிக்க வேண்டிய சில வேடிக்கையான தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை பாருங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எல்ஜி ஓஎல்ஈடி டிஸ்ப்ளே

எல்ஜ நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் இந்த டிஸ்ப்ளே, பேப்பர் போன்றே இருக்கும் இந்த தொழில்நுட்பம் எந்த கோணத்தில் இருந்தும் பார்க்க முடியும்.

டயட் சென்சார் ஸ்கிஓ

உணவு கட்டுப்பாட்டில் ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கருவியோடு சேர்ந்த செயலி வழி செய்யும். இன்ஃப்ரா-ரெட் கதிர்களின் மூலம் இந்த கருவியானது உணவு சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் திறன் கொண்டதாகும்.

செல்பீ கேமரா

கழுத்தில் மாட்டி கொண்டு எளிமையாக செல்பீ எடுக்க வழி செய்யும் கருவி தான் இந்த வளையும் தன்மை கொண்ட செல்பீ ஸ்டிக். மேலும் இந்த வளைந்த கேமராவை கொண்டு 1080எச்டி வீடியோ பதிவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்

பிரபல ஐ-டிராக்கிங் நிறுவனமான டோபி யுபிசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டிருக்கும் MSI GT72 Dominator Pro Tobii கருவியை கொண்டு வீியோ கேம்களில் சில ஆப்ஸ்ரஷன்களை கண் மூலம் இயக்க முடியும்.

டிஜிட்சோல் ஸ்மார்ட்ஷூ

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஸ்மார்ட்ஷூ யுகம் துவங்கியதன் தொடக்கம் தான் இது. டிஜிட்சோல் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஷூவினை ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயக்க முடியும் என்பதோடு குளிர் காலங்களில் பாதங்களை சூடாக வைத்திருக்கும் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

மாசிவ் பாரட் டிஸ்கோ டிரோன்

இந்த வகை டிரோன் கருவியானது மற்ற டிரோன்களை விட அதிக நேரம் வானத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கின்றது. இந்த டிரோன் கருவியை வானில் தூக்கி எறிந்தால் போதுமானது. மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டிருப்பதோடு இதில் 14 எம்பி டிரிபிள் ஆக்சிஸ் ஸ்டேபிலைஸ்டு கேமரா மற்றும் 32 ஜிபி எச்டி வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் கொண்டிருக்கின்றது.

நெடாட்மோ பிரசன்ஸ் கேமரா

மின்விளக்கு கொண்ட இந்த பாதுகாப்பு கேமராவானது வெளியில் நடக்கும் பல விடயங்களை ட்ராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. இதோடு இந்த கேமராவானது வீட்டு வை-பையுடன் இணைந்து ஸ்மார்ட்போனிற்கு நோட்டிபிகேஷன்களை அனுப்பவும் செய்யும்.

மியூஸிக் ஸ்மார்ட் ஹெட்போன்கள்

வயர்லெஸ் டச் கண்ட்ரோல் கொண்ட இந்த வகை ஹெட்போன்கள் ஆடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

வைஸ்வியர் சேஃப்டி பிரேஸ்லெட்

பார்க்க அழகிய அணிகலன் போன்று காட்சியளிக்கும் இந்த கருவியானது தலைசிறந்த பாதுகாப்பு கருவியாக அமையும். இந்த கருவியை அணிந்திருக்கும் போது கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால், இந்த கருவியை தட்டினால் இந்த கருவி இருக்கும் இடத்தின் முகவரியை குறுந்தகவல் மூலம் அனுப்பி விடும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Best gadgets that make your life simple and easier. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்