உங்களது பெர்சனல் மெயிலை இவர்கள் பார்க்கலாம்...!

Written By:

சிறிது நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8.1 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்ரோசாப்ட் , அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது.

அப்போது, ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது. அப்போதுதான் ஒரு உண்மை உலகிற்குத் தெரிய வந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், எப்படி ஹாட்மெயில் தளத்தில் உள்ள அதன் பதிவு பெற்ற சந்தாதாரர்களின் மின் அஞ்சல்களைப் படிக்கலாம்? எனப் பலர் கேள்வி கேட்டனர். அதற்கு, மைக்ரோசாப்ட், அதற்கு அனைத்து சந்தாதாரர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர் என்று மைக்ரோசாப்ட் பதிலளித்தது. அப்படியா? என்று வியப்பதற்கு முன்னால், இன்னும் ஒரு செய்தி.

நாம், ஹாட்மெயில் தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி அமைக்கும்போது, அதற்கான அந்நிறுவனத்தின் விதிமுறைகளை முழுமையாகப் படிப்பதில்லை.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

உங்களது பெர்சனல் மெயிலை இவர்கள் பார்க்கலாம்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சிறிய எழுத்துக் களில் மிக நீளமாக இருப்பதனைப் பொறுமையுடன் படிக்க இயலாமல், அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக Accept என்ற பட்டனில் கிளிக் செய்து, அக்கவுண்ட் உருவாக்க அனுமதிக்கிறோம்.

இங்கு தான், வினையே உள்ளது. நிபந்தனைகளின் ஒரு பிரிவில், தேவைப்பட்டால் உங்களது தகவல்களை எடுக்க மைக்ரோசாப்டுக்கு உரிமை உள்ளது எனத் தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் உங்களைப் பற்றிய தகவல்களை அணுகி, அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெளிவாக அந்த நிபந்தனை உள்ளது.

இதனால், அனைவரின் அஞ்சல்களையோ, வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களையோ, மைக் ரோசாப்ட் தொடர்ந்து படித்து வெளிப்படுத்துகிறது என்று எண்ண வேண்டாம்.

கிடைக்கும் தகவல்கள், மேலே சுட்டிக் காட்டப்பட்டது போன்ற சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும் என எண்ணினால், மைக்ரோசாப்ட் அவற்றை அணுகி, படித்துத் தெரிந்து கொள்கிறது.

இதனை அடுத்து, கூகுள் மற்றும் யாஹூ மின் அஞ்சல் தளங்களின் சேவைகளுக்கான நிபந்தனைகளைப் பார்த்த போது, அவையும் இது போன்ற நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிகளையும் விதித்துள்ளன என்பது தெளிவாகிறது.

நம்மைப் பற்றிய தகவல்கள் அவர்களின் சர்வர்களிலேயே பதிவாவதால், அவற்றை அணுகுவதற்கோ, கைப்பற்றுவதற்கோ, இந்த நிறுவனங்களுக்கு நீதி மன்ற ஆணைகளும் அனுமதியும் தேவை இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்