ஆப்பிள் மேக்புக் ஏர் போட்டியாக வருகிறது சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப்.!

13.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப் வெளிவந்துள்ளது.!

By Prakash
|

சியோமி நிறுவனம் தற்போது ஒரு புதிய லேப்டாப் அறிமுகம் செய்கிறது, இதன் பெயர் சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப், இது ஆப்பிள் மேக்புக் ஏர் போட்டியாக வருகிறது என கணினி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சியாமி நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவலின்படி இந்த சியோமி மி நோட்புக் ஏர் என்பது ஏழாவது தலைமுறை இண்டெல் கோர் ஐ7 பிராஸசர் என்பது உறுதியாகியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இது 13.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப் வெளிவந்துள்ளது, மேலும் 8ஜிபி ரேம் இதில் பொருத்தப்பட்டு;ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த மி நோட்புக் ஏர் மாடலில் உள்ள சிறப்பு என்பது என்னவெனில் இதில் 4ஜி சிம்கார்டு போடும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஜூன் 18:

ஜூன் 18:

இந்த சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப் ஜூன் 18ஆம் தேதி விற்ப்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வாங்குவதற்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ் 10 இயக்க முறைமையில் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12 சதவீதம் :

12 சதவீதம் :

சியோமி மி நோட்புக் ஏர் லேப்டாப் 4ஜி எல்டிஇ-மோடமின் புதிய பதிப்பைக் கொண்டுள்ளது, மேலும் 6வது தலைமுறை கோர் எம்3 ஒப்பிடுகையில் இதன் செயல்திறன் கிட்டத்தட்ட 12 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கிராஃபிக்ஸ்:

கிராஃபிக்ஸ்:

மி நோட்புக் ஏர் அதன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் 2ஜிபி ஜிடிடிஆர்5 நினைவகத்துடன் எம்எக்ஸ்150 கிராஃபிக்ஸ் கார்டில் உள்ளமைக்கப்பட்ட நிலையில் வருகிறது. மேலும் பல்வேறு நினைவக ஆற்றல் உடன் இவற்றை வெளியிடுகிறது, சியோமி நிறுவனம்.

பேட்டரி:

பேட்டரி:

மி நோட்புக் ஏர் 9.5 மணி நேர பேட்டரி ஆயுள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது, புதிய கைரேகை அங்கீகார தொழில்நுட்பத்துடன் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்டர்நெட் பயன்பாடு போன்ற சிறப்பு அம்சங்களுக்கு இவை அருமையாக பயன்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Notebook Air with Intel Kaby Lake processor 8GB RAM announced : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X