மேக்புக் வாங்கக் காசு இல்லையா? எம்ஐ நோட்புக் ஏர் இருக்கு!

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமி லாப்டாப் சந்தையிலும் கால் பதித்துள்ளது.

சியோமி ரெட்மி ப்ரோ கருவியுடன் அந்நிறுவனம் எம்ஐ நோட்புக் ஏர் கருவியையும் அறிமுகம் செய்துள்ளது. மற்ற லாப்டாப்களில் பரவலாக வழங்கப்படாத அம்சமாகத் தனித்துவம் வாய்ந்த கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இது மற்றவற்றை விட வேகமானதாகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

பார்க்க அப்படியே ஆப்பிள் மேக்புக் போன்று காட்சியளிக்கும் எம்ஐ நோட்புக் ஏர் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் பங்குதாரரான டியான் எம்ஐ இந்தக் கருவியை வடிவமைத்தது.

லோகோ

லோகோ

பார்க்க அழகாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள எம்ஐ நோட்புக் ஏர் லோகோ கணினியை திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.

மாடல்

மாடல்

12.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே என இரு வித அளவுகளில் எம்ஐ நோட்புக் ஏர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளின் விற்பனை ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் சீனாவில் துவங்குகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட கருவியில் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. 13.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடலிலும் ஒரே வித ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது, என்றாலும் சிறிய மாடலை விடப் பிரகாசமான நிறங்களைப் பிரதிபலிக்கும்.

பிராசஸர்

பிராசஸர்

சியோமி சிறிய லாப்டாப் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் m6Y30 பிராசஸர் மற்றும் இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 515 கொண்டுள்ளது. பெரிய திரை கொண்ட மாடல் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i5 6200U பிராசஸர் மற்றும் 1 ஜிபி NVIDIA Gefore GT 940MX கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

சியோமி எம்ஐ நோட்புக் ஏர் 4 ஜிபி ரேம், 128 ஜிபி SATA SSD மற்றும் நீட்டிக்கும் திறன் கொண்ட SSD ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பெரிய திரை கொண்ட லாப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி SSD மற்றும் நீட்டிக்கும் திறன் கொண்ட SSD ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

எம்ஐ நோட்புக் ஏர் இரு மாடல்களிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சியோமி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் சார்ந்த தகவல் உண்மையாகியுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வை-பை, ப்ளூடூத் 4.1, யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ மற்றும் இரு மாடல்களிலும் 1 எம்பி எச்டி வெப்கேமரா மற்றும் டிஜிட்டல் அரே மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ரியல்டெக் ALC255, டால்பி ஆடியோ, டூயல் ஸ்பீக்கர் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

12.5 இன்ச் லாப்டாப் கருவியில் 11.5 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் 37Wh பேட்டரியும், பெரிய லாப்டாப் மாடலில் 40Wh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

சீனாவில் 12.5 இன்ச் சியோமி எம்ஐ நோட்புக் ஏர் இந்திய மதிப்பில் ரூ.35,000 மற்றும் 13.3 இன்ச் மாடல் இந்திய மதிப்பில் ரூ.50,000 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு கருவிகளின் இந்திய வருகை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Notebook Air Announced with Windows 10 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X