Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டிவி அப்ளிகேசனுடன் வரும் ஐரா டேப்லெட்!

Updated: Sunday, July 15, 2012, 9:42 [IST]

wishtel launches ira thing 2 tablet at rs 6500

விஷ்டெல் நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு ஐரா திங்2 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

7 இன்ச் மல்டி டச் கப்பாசிட்டிவ் திரையில் வரும் இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீ்ம சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு 1.5 கிலோ ஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் ஆகியவற்றுடன் இந்த டேப்லெட் வருகிறது.

இந்த டேப்லெட் கருப்பு, சிவப்பு, மஞ்சள், பிங்க், ஊதா மற்றும் வெள்ள என 6 வண்ணங்களில் வந்து ஜொலிக்கிறது. இந்த டேப்லெட்டில் டிவி அப்ளிகேசன் உள்ளதால் இதில் 120 டிவி சேனல்களைப் பார்த்து மகிழ முடியும். குறிப்பாக பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள், செய்திகள், சிறுவர் நிகழ்ச்சிகள், இசை மற்றும் பேஷன் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்க முடியும்.

மேலும் இந்த டேப்லெட்டில் இ நியூஸ் அப்ளிகேசன் உள்ளதால் இந்தியாவில் இருக்கும் 55 வகையான மொழிகளில் வரும் செய்தித் தாள்களை இந்த டேப்லெட்டில் வாசிக்க முடியும்.

இந்த டேப்லெட் 4ஜிபி மெமரியுடன் வருகிறது. இதன் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதோடு இதில் 1.3 எம்பி முகப்பு கேமரா இருப்பதால் வீடியோ உரையாடல் நடத்துவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது.

அதேபோல் இந்த டேப்லெட் 1080பி எச்டி வீடியோவையும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த டேப்லெட்டிற்கு இதன் பேட்டரி 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் 3ஜி மற்றும் வைபை வசதியையும் வழங்குகிறது.

ரூ.6,500க்கு விற்கப்பட இருக்கும் இந்த ஐரா டேப்லெட் இந்தியாவில் உள்ள முக்கியமான 50 மாநகரங்களில் விற்கப்படுகிறது.

Story first published:  Sunday, July 15, 2012, 9:42 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll