விண்டோஸ் 7ல் உள்ள கேம்ஸை நீக்க...!

By Keerthi
|

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும்.

இவை தேவைப்படாதவர்கள், ""இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?'' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.

ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\StartMenu\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும்.

இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது. விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும். விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் "Programs" என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். "All Programs" என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் "Games" என்ற போல்டருக்குச் செல்லவும்.

விண்டோஸ் 7ல் உள்ள கேம்ஸை நீக்க...!

அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Cut" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.

தோற்றமும் வண்ணமும் மாற்ற: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் காட்டப்படும் காட்சியின் தன்மையையும், வண்ணங்களையும் எப்படி மாற்றலாம் என்பதைக் காணலாம்.

குறிப்பாக டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, பாப் அப் விண்டோஸ் இவற்றினை அழகாககவும், கண்களைக் கவர்ந்திடும் வகையில், நாம் விரும்பும் வழியில் வைத்திருக்கவே நாம் விரும்புவோம். அந்த மாற்றங்களை மேற்கொள்வது எப்படி எனக் காணலாம்.

விண்டோஸ் வண்ணங்கள் மற்றும் தோற்றத்தினை மாற்ற விரும்பினால், விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகளில், முதலில் கண்ட்ரோல் பேனல் திறந்து அதில் உள்ள display ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.

இனி, இடது புறம், வண்ணங்கள் அடங்கிய பிரிவிற்கான லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அளவு, அதற்கான ஐகான், வண்ணம், வடிவம் (size, icon, font, color and format) ஆகியவற்றை மாற்றுவதற்கான வழிகள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். நம் விருப்பப்படி அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து மாற்றங்களையும் மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், அல்டிமேட் புரபஷனல் மற்றும் என்டர்பிரைஸ் பதிப்பு எனில், டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், personalize என்பதில் கிளிக் செய்திடவும்.

இதில் விண்டோ கலர் (window color) என்பதில் கிளிக் செய்தால் புதிய விண்டோ காட்டப்படும். இதில் விண்டோவின் வண்ணம், ஒளி ஊடுறுவும் வகையினை (transparency) மாற்றி அமைப்பது, வண்ணத்தின் அழுத்த அளவை மாற்றுவது, வண்ணங்களை கலந்து அமைப்பது போன்றவற்றிற்கான வசதிகளைக் காணலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X