டீம் வியுவர் பற்றி சில தகவல்கள்...!

Written By:

உங்களுக்கு ஓரிரு இடங்களில் கிளைகள் உள்ள வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் கம்ப்யூட்டர் வழியாகவே அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

இதற்கு ஒவ்வொருமுறையும் நீங்கள் இமெயில் பயன்படுத்தி பைல்களை அனுப்பி அல்லது அனுப்பச் சொல்லி வழிகளைக் காட்ட வேண்டியதில்லை.

இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கட்டுப் பாட்டில் உள்ள கிளைகளின் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதில் உள்ள பைல்களைக் காப்பி செய்திடலாம். மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதற்கான இலவச சாப்ட்வேர் தொகுப்பு தான் டீம் வியூவர் (TeamViewer).

இது ஒரு ரிமோட் கண்ட்ரோல் புரோகிராம். இதனைப் போல பல புரோகிராம்கள் இருந்தாலும் எளிய வகையில் சிக்கலின்றி நாம் கம்ப்யூட்டர்களை இன்னொரு இடத்திலிருந்து கட்டுப்படுத்த இதுவே சிறப்பாக உதவுகிறது.

டீம் வியுவர் பற்றி சில தகவல்கள்...!

நொடியில் மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களுடன் உங்களை இணைக்கிறது. இதற்குத் தனியாக தொழில் நுட்ப உதவி, அல்லது கான்பிகரேஷன் தேவையில்லை. இதற்கென ஐ.பி. அட்ரஸ் உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் யாருடன் கனெக்ட் ஆக விரும்புகிறீர்களோ அவர் களுடன் இந்த இணைப்பிற்கான உங்கள் ஐ.டி. மற்றும் பாஸ் வேர்டினைப் பகிர்ந்து கொண்டால் போதும்.


நேலும் இதில் தான் டீம் வியூவர் பதிப்பு 4க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த புதிய பதிப் பின் மூலம் 10 பேர் ஒரே நேரத் தில் நெட்வொர்க்கில் இணைந்து ஒருவர் மற்றவரின் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத் தும் வசதி தரப்பட்டுள்ளது.

இதில் என்கிரிப்ஷன் வசதியும் பைல் மாற்றும் வசதியும் ஒருவருக்கொருவர் சேட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கின்றி பயன்படுத்த இலவசமாகவும் வர்த்தக காரணங்களுக்காகப் பயன்படுத்த கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பும் கிடைக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்