இந்தியாவில் விலை குறைந்த லேப்டாப் அறிமுகம்.!!

Written By:

இந்தியாவை சேர்ந்த ஐபால் நிறுவனம் பட்ஜெட் விலையில் லேப்டாப் கருவியினை அறிமுகம் செய்துள்ளது. மும்பையை சேர்ந்த ஐபால் நிறுவனம் ஐபால் காம்ப் புக் எகக்செல்லன்ஸ் மற்றும் காம்ப் புக் எக்செம்ப்ளேர் என இரு கருவிகளை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.13,999க்கு அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

காம்ப் புக் எக்செல்லென்ஸ் கருவியில் 11.6 இன்ச் மல்டி-டச் ஐபிஎஸ் திரையும் காம்ப் புக் எக்செம்ப்ளேர் 14 இன்ச் மல்டி-டச் ஐபிஎஸ் திரை கொண்டிருக்கின்றது. இரு லேப்டாப்களின் மற்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் வழங்கப்பட்டுள்ளது.

2

1.83 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் குவாட் கோர் எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 34 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இரு கருவிகளும் 10,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

3

விண்டோஸ் 10 இயங்குதளம், வை-பை, ப்ளூடூத் வி4.0, எச்டிஎம்ஐ, மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதோடு ஃபுல்-லென்த் கீபோர்டு, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், விஜிஏ முன்பக்க கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

4

இரு லேப்டாப்களும் சில தனங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் விலை குறைந்த லேப்டாப்களின் பட்டியலை பாருங்கள்.

5

இந்திய சந்தையில் ரூ.12,499 முதல் இந்த கருவியின் விலை துவங்குகின்றது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட இந்த லேப்டாப்பில் இன்டெல் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 11.6 இன்ச் திரை மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

6

இந்திய சந்தையில் ரூ.14,499 முதல் இந்த கருவியின் விலை துவங்குகின்றது. விண்டோஸ் 10 இயங்குதளம், இன்டெல் ஆடம் குவாட் கோர் பிராசஸர், 11.6 இன்ச் திரை மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

7

இந்தியாவில் ரூ.18,000 முதல் துவங்கும் இந்த கருவியில் இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர் 13.3 இன்ச் ஆன்டி-கிளேர் திரை மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளன.

8

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட எச்பி பெவிலியன் கருவியில் 2 ஜிபி ரேம், 500 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் மற்றும் 11.6 இன்ச் திரை போன்றவே வழங்கப்பட்டுள்ளது.

9

ஆன்லைனில் களமிறங்கும் ரிலையன்ஸ்.!!

ஐபோன்7 தாறு மாறாக இருக்கும், அடித்து கூறுகிறார் டிம் குக்.!!

10

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 5 Cheapest Windows 10 laptops in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்